Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இணைய பயன்பாடு: பெண்கள் முன்னிலை!

இந்திய இணைய மற்றும் மொபைல் கழகம் (Internet and Mobile Association of India) , இணைய சந்தை ஆராய்ச்சியகமும் (Internet Market Research Bureau) இணைந்து, இந்தியாவில் உள்ள மிக முக்கிய  35 நகரங்களில் இணையம் பயன்படுத்துவோர் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதில், இந்தியாவில், பெண்களே அதிகமாக இணையத்தினைப் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது. இணையப் பயனாளர்கள் எண்ணிக்கை வளர்ச்சியில், பெண்கள் 30 சதவிகிதமாகவும், ஆண்கள் 25 சதவிகிதமாகவும் உள்ளனர் என்று அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
 
மும்பையில் தான் அதிகமாக இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாகவும், இந்த வளர்ச்சி வேகம் சென்னையில் மிகக் குறைவாக இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இளம் வயது பெண்கள், ஸ்மார்ட் போன்களை மட்டுமே பயன்படுத்துபவர்களாக உள்ளனர். இந்த ஆய்வில், மும்பை 1.6 கோடி பேர்களுடனும், டில்லி 1.2 கோடி பேர்களுடனும் முதல் இரண்டு இடத்தைப் பிடித்துள்ளன. சென்னை 55 லட்சம் பேர்களைக் கொண்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ