Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2015-ல் இந்தியாவின் ட்விட்டர் பயனாளர்கள் வளர்ச்சி 30.4%!

இமார்க்கெடர் என்கிற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், இந்திய சமூக வலைதள பயனாளர்களில் 17% பேர் ட்விட்டர் வலைதளத்தை பயனபடுத்தி வருகிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது. ஆசிய நாடுகளிலேயே அதிகமாக ட்விட்டர் பயன்படுத்தும் நாடாக இருந்து வரும் ஜப்பானில் ட்விட்டர் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 26 மில்லியனாக இருக்கிறது. இந்த நாட்டை தொடர்ந்து இந்தியா 22.2 மில்லியன் ட்விட்டர் பயனாளர்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

கடந்த 2014- ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் ட்விட்டர் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 18.1 மில்லியனாக இருந்ததாதகவும்,  நடப்பு 2015-ம் ஆண்டில் இந்தியாவில் ட்விட்டர் பயனாளர்களின் வளர்ச்சியானது 30.4 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP