Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 400, நிஃப்டி 100 புள்ளிகள் வீழ்ச்சி!

சென்செக்ஸ் 400, நிஃப்டி 100 புள்ளிகள் வீழ்ச்சி!
 
இந்திய சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சியில் வர்த்தகமாகின்றன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 400  புள்ளிகளுக்கு மேல் சரிந்து 29262 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 121 புள்ளிகள் சரிந்து 8830 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகிறது.
 
இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் 22 ரூபாய் அதிகரித்து 27,441 ரூபாய்க்கும், கச்சா எண்னெய் ஒரு பேரல் 20 ரூபாய் அதிகரித்து 2,774 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.73 ஆக உள்ளது. 
 
பிப்ரவரி மாதம் பட்ஜெட்டின் போது சந்தைகள் நிச்சயம் அதிகரிக்கும் என்ற நோக்கில் மாதத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சுமார் 1.30% சரிந்து வர்த்தகமாகின்றன.

இன்றைய வர்த்தகத்தில் 1330 பங்குகள் விலை அதிகரித்தும், 950 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமகின்றன.

 விலை அதிகரித்த பங்குகள்:

ஹச்சிஎல் டெக் 8.22
என்பிடிசி                 2.01
டெக் மஹிந்த்ரா 1.91
பிஹச் இஎல்         1.79
டிஎல்எஃப்                 1.71

விலை குறைந்த பங்குகள்:
 
பாங்க் ஆஃப் பரோடா -12.27
எஸ்பிஐ         -4.50
டாக்டர் ரெட்டில் லேப்ஸ் -3.96
பிஎன்பி         -3.79
கோல் இந்தியா         -3.33
 

 சரிவில் இந்திய சந்தைகள் ! காலை 9:30 மணி நிலவரம்

 
இந்திய சந்தைகள் இன்று ஆரம்பத்தில் ஏற்றத்தில் காணப்பட்டன தற்போது மீண்டும் சரிவில் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 81 புள்ளிகள் சரிந்து 29600 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 21 புள்ளிகள் சரிந்து 8932 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகிறது.
 
இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் 340 ரூபாய் விலை குறைந்து 27,419 ரூபாய்க்கும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் 18 ரூபாய் குறைந்து 2,754 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.78 ரூபாயாக உள்ளது. 
 
அமெரிக்க சந்தைகள் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளதால் இந்திய சந்தைகள் ஆரம்பத்தில் ஏற்றத்தில் வர்த்தகமானது. ஆசிய சந்தைகளில் கானப்பட்ட இறக்கம் சந்தையில் மாற்ரத்தை ஏற்படுத்தியது.
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
ஹச் சி எல் டெக் 7.46
டிஎல்எஃப் 3.75
என்டிபிசி 2.75
பிஹச்இஎல் 2.74
டெக் மஹிந்தரா 1.98
 
விலை குறைந்த பங்குகள்:
 
கோல் இந்தியா -3.00
டாக்டர் ரெட்டில் லேப்ஸ் -2.00
பாரதி ஏர்டெல் -1.92
பாங்க் ஆஃப் பரோடா -1.91
செஸா ஸ்டெர்லைட் -1.81

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ