Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கேட்ஜெட் பார்வை: ஹெச்பி பெவிலியன் 13-b102TU (HP Pavilion 13-b102TU)

ஹெச்பி பெவிலியன் 13-b102TU
(HP Pavilion 13-b102TU)
 
 
 டிசைன்! 
இது சற்று குறைந்த விலை லேப்டாப்-ஆக இருந்தாலும், ஹெச்பி நிறுவனம் இதை எந்தவொரு குறையும்  இல்லாமல் டிசைன் செய்துள்ளது. பார்ப்பதற்கு ஸ்டைலாகக் காட்சியளிக்கும் இந்த லேப்டாப், ஒரு மெட்டாலிக் சில்வர் பாடியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த லேப்டாப், பிளாஸ்டிக்கைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறம் முழுவதும் கறுப்பு நிறத்தில் அமைந்துள்ளது. 1.7 கிலோ கிராம் எடையுள்ள இந்த லேப்டாப், 21.33 mm அடர்த்தியைக் கொண்டது. இந்த லேப்டாப்பில் ஒரு வெப்-கேமராவும் அடங்கும்.
 
 தொழில்நுட்பம்! 
இந்த ஹெச்பி லேப்டாப் 4-வது ஜென் Dual-core Intel core i3-4030U பிராசஸரைக் கொண்டு இயங்குகிறது. 1.9GHz என்ற வேகத்தில் இயங்கும் இந்த பிராசஸர் சூடாகாமல் குறைவான மின்சாரத்தைக் கொண்டு இயங்கும் தன்மையைக் கொண்டுள்ளது. 4GB ரேம் மற்றும் 1TB ஹார்டு-டிஸ்க்கை கொண்டுள்ள இந்த லேப்டாப், HD 4400 GPU என்ற கிராபிக்ஸ் பிராசஸரைக் கொண்டுள்ளது. ரேமை 8GB வரை விரிவுபடுத்திக் கொள்ளலாம். WiFi மற்றும் ப்ளூ-டூத் வசதிகளும் இந்த லேப்டாப்பில் அடங்கும். இந்த லேப்டாப்பில் CD/DVD டிரைவ் கிடையாது.
 
 டிஸ்ப்ளே! 
இந்த லேப்டாப் 13.3 இன்ச் LED-Backlit ‘non-glossy’ ஸ்கிரீனைக் கொண்டுள்ளது. 1366*768 ரெசலியூஷன்  கொண்டுள்ள இந்த டிஸ்ப்ளே, ‘Anti-glare’ கோடிங்கைக் கொண்டுள்ளது. இதனைக் கொண்டு வெளிப்புற வெளிச்சத்திலும் உள்புற வெளிச்சத்திலும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் தெளிவான காட்சியை அளிக்கும் திறனை இந்த டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
 
 ஓஎஸ்! 
இந்த லேப்டாப், 64 பிட் விண்டோஸ் 8.1 இயங்குதளத்தைக் கொண்டு இயங்குகிறது. WildTangent Games, Tripadvisor, The Weather Channel, MySMS, Evernote, HP Connected Music என பல ஆப்ஸ்களையும் சாஃப்ட்வேர்களையும் ஹெச்பி நிறுவனம் இதில் தந்துள்ளது. மேலும், ‘trial version’ மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் சாஃப்ட்வேரும் இந்த ஹெச்பி லேப்டாப்பில் அடங்கும்.
 
 பேட்டரி! 
இந்த லேப்டாப், 3-cell Lithium Ion Prismatic பேட்டரியைக் கொண்டுள்ளது. 43.41 Wh திறன் கொண்டுள்ள இந்த பேட்டரியைக் கொண்டு சுமார் மூன்று மணி நேரம் வரை லேப்டாப்பை செயல்படுத்தலாம். இது மற்ற லேப்டாப்களின் பேட்டரியைவிட சுமார்தான்.
மேலும், இந்த லேப்டாப் ‘Beats Audio’ தொழில்நுட்ப ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. இந்த ஸ்பீக்கர்கள் வலுவான ஒலியைத் தரும் ஆற்றல் உடையது. வலிமையாக இருந்தாலும் இந்த ஸ்பீக்கரிலிருந்து வரும் ஒலி தெளிவாக இருக்கும் என்பது கூடுதல் பிளஸ்.
 
 இந்திய மார்க்கெட்டில் புதிதாக அறிமுகமாகி இருக்கும் இந்த லேப்டாப்பின் விலை 39,900 ரூபாய்!
 
 

பிளஸ்:
  டிசைன்
  குறைந்த எடை
 
மைனஸ்:
  பேட்டரி
  CD/DVD டிரைவ் கிடையாது
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ