Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உங்கள் வீடு பாதுகாப்பாக உள்ளதா?

உங்கள் வீடு பாதுகாப்பாக உள்ளதா?
 
வீடு திரும்பும் வரை, உங்கள் வீட்டில் களவு நிகழுமோ என்ற அச்சமா? நீங்கள் வேலைக்குப் போகும்போது முதியவர்கள் அல்லது குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுச் செல்கிறோம் என்ற கவலையா? இனி எதற்கும் நீங்கள் கலங்க வேண்டாம். தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியுடன் பாதுகாப்பானது இப்போது உங்கள் கைகள் வரை வந்துள்ளது. உங்கள் கைபேசியின் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலம் இனி உங்கள் வீட்டை பாதுகாக்க முடியும். வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பொருத்தப்படும் சிசிடிவி கேமராக்கள் படம் பிடித்தவற்றை நீங்கள் உலகில் எங்குச் சென்றாலும் உங்கள் கைபேசியிலோ லேப்டாப்பிலோ அவற்றைக் கண்காணிக்கலாம். அந்தக்க காட்சிகளை 'லைவ் ரெக்கார்டும் செய்யலாம். முன்பு எடுத்த காட்சிகளையும் பார்க்கலாம். இதற்குத் தேவை ஸ்மார்ட்போனில் சிசிடிவி அப்ளிகேஷன்.
 
சிசிடிவி அப்ளிகேஷன்கள்!
 
முதலில் சிசிடிவி கேமராக்களை வீட்டில் அல்லது அலுவலகத்தின் முக்கியமான இடங்களில் அமைக்க வேண்டும். அதன்பிறகு சிசிடிவி கேமரா, ஸ்மார்ட்போன் (ஸ்மார்ர்ட்போனில் உள்ள அப்ளிகேஷன்) உடனான தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம், கேமராக்களின் காட்சிகளை ஸ்மார்ட்போனில் பார்க்க முடியும். வீட்டில் ஆட்கள் இல்லாத போது ஏதேனும் அசைவுகள் தென்பட்டால் அவற்றை உடனுக்குடன் குறுஞ்செய்தி அல்லது வாய்ஸ்கால் மூலமாகவோ அல்லது இ-மெயில் மூலமாகவோ சிசிடிவி கேமராக்களானது ஆட்டோமேட்டிக்காக ஸ்மார்ட்போன்களுக்குத் தெரிவிக்கும். இதனை 'Event notification' என்று அழைக்கிறார்கள். கேமராக்களை அலைபேசியிலே இயக்கலாம். கேமராக்களைக் கைபேசி வழியாகவே zoom மற்றும் அவற்றின் திசையை மாற்றலாம். இதில் "நைட் விஷன்" என்று அழைக்கப்படும் இரவில் துள்ளியமாக முகங்களைப் படம் பிடிக்கும் அம்சம் உள்ளது.
 
 
பலவகை செட்டிங்ஸ்கள்!
 
பெரும்பாலான நிறுவனங்கள் இந்தவகை சிசிடிவி கேமராக்களுக்குக் குறைந்தது 6 மாதங்கள் அல்லது 1 வருடம் வரை உத்தரவாதத்தைத் தருகின்றன. ரகசிய குறியீடுகளை வைத்து ஒரேசமயத்தில் வேறுவேறு இடங்களில் இருந்து பல கைபெசிகள் மூலம் கண்காணிக்கலாம். இந்த அப்ளிகேஷனை கைபேசியில் பொருத்துவது மிகச் சுலபம், பின்னணியிலும் ஸ்லீப் மோடிலும் இயங்குவதால் கைபேசியின் பேட்டரியானது சேமிக்கப்படும். காட்சிகளை லைவ்வாகப் பார்க்க அனைத்துவிதமான நெட்வொர்க்கும் பொருந்தும். (Wifi,2G,3G,etc). இந்த வகை அப்ளிகேஷன்களில் 'லைவ் ரெக்கார்டும் செய்யலாம். ஸ்நேப்ஷாட்டும் எடுக்கலாம். ஆடியோவையும் ரெக்கார்டு செய்யலாம். மொத்த சிசிடிவி அமைப்பையும் 'Wireless' மூலமாகக்கூட இணைக்கலாம்.
 
சென்னை அண்ணாசாலையில் உள்ள எலெக்ட்ரானிக் மார்க்கெட்டான ரிச் ஸ்ட்ரீட்டில் இது கிடைக்கும். நல்ல கம்பெனியாக இருந்தால் நல்லது. சாதாரணத் தரம் முதல் HDதரம் வரை கேமராக்கள் உள்ளன. அம்சங்களுக்கு ஏற்றவாறு விலையும் மாறும். படம் பிடித்த காட்சிகளைச் சேமிக்கும் "Hard Disk"யின் மெமரி அளவைப்பொறுத்துகூட விலை குறையலாம். "Hard Disk " நிரம்பியவுடன் மீண்டும் "Over Write" செய்து கொள்ளலாம் அல்லது ஏதேனும் அசைவுகள் இருந்தால் மட்டும் படம் பிடிக்கும்படியான செட்டிங்கை மாற்றிக்கொள்ளலாம். இதனை "Motion Recording" என்று அழைக்கிறார்கள். இதனால் மற்றொரு புதிய 'Hard Disக்-ஐ வாங்க அவசியம் இல்லை. அனைத்து கேமராக்களுக்கும் பொதுவாக ஒரே மானிட்டர் மற்றும் ஒரே ரெக்ககார்டரைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
 
பலவகை அப்ளிகேஷன்கள்!
 
இன்றைய நிலையில் ஒவ்வொரு சிசிடிவி நிறுவனங்களும் அதன் அப்ளிகேஷன்களை டிசைன் செய்கிறது. களவுகள் மற்றும் பிற குற்றங்கள் பெருகிவரும் இந்தக் காலக்கட்டத்தில் இந்த வசதி பாதுகாப்பை உறுதி படுத்தும். பிரபலமான சில சிசிடிவி அப்ளிகேஷன்கள் - HiFocus, VHDR Lite for Android, CCTV Camera Pros Mobile, iCamViewer for iOS போன்ற பல அப்ளிகேஷன்கள் கூகுள் ப்ளே போன்ற நம்பகத்தன்மையான அப்ளிகேஷன் ஸ்டோர்களில் கிடைக்கின்றன.
 
- சி தினேஷ் குமார் (மாணவ பத்திரிகையாளர்)
 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ