Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் முடிந்த இந்திய சந்தைகள்

 

3.30 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 60.68 புள்ளிகள் குறைந்து 29122.27 புள்ளிகளுக்கு வர்த்தகமாயின. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 11.50புள்ளிகள் குறைந்து 8797.40  புள்ளிகளுக்கு வர்த்தகமாயின. இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.17%.

இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் 48 ரூபாய் விலை குறைந்து 27,847 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.  ஒரு பேரல் கச்சா எண்ணெய் 78 ரூபாய் அதிகரித்து 2,933 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.81 ரூபாயாக உள்ளது.

இன்றைய சந்தை முடிவில் மூலதன பொருட்கள்,  கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், வங்கி போன்ற துறைகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. எஃப்எம்சிஜி, மெட்டல், எண்ணெய் மற்றும் காஸ் ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின.

மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் 3,040 நிறுவன பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,614 நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், 1,300 நிறுவன பங்குகள் இறக்கத்திலும், 126 நிறுவன பங்குகள் தேக்க நிலையிலும் வர்த்தகமாயின. தேசிய பங்குச் சந்தையில் 21 நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், 29 நிறுவன பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.

உலக அளவில் அமெரிக்க சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. ஐரோப்பிய சந்தைகள் தேக்க நிலையில் வர்த்தகமாகின்றன. ஆசியாவில் இறக்கத்திலும், தேக்க நிலையிலும் வர்த்தகமாயின.

ஏற்றப் பங்குகள்

ஹெச் சி எல் டெக்        5.54

ஆக்ஸிஸ் பேங்க் 4.97

ஹிண்டால்கோ 3.97

விப்ரோ          3.06

ஐடிஎஃப்சி                  2.44

 

இறக்கப் பங்குகள் :

ஏசியன் பெயின்ட்ஸ்         -5.79

பார்தி ஏர்டெல்                   -3.85

டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் -2.91

பேங்க் ஆஃப் பரொடா -2.74

ஹெச் யூ எல்           -2.63

 

 

 

 

 

 

11.30 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 107.77 புள்ளிகள் குறைந்து 29075.18 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 22.95 புள்ளிகள் குறைந்து 8785.95 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது.

இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் 65 ரூபாய் விலை அதிகரித்து  27,960 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,849 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,664 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 

ஒரு பேரல் கச்சா எண்ணெய் 101 ரூபாய் அதிகரித்து 2,806 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.   பிரன்ட் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 3.86 டாலர் அதிகரித்து 52.99 டாலருக்கு வர்த்தகமாகிறது. டபிள்யு.டி.ஐ கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 3.71 டாலர்கள்  அதிகரித்து 48.24 டாலருக்கு வர்த்தகமாகிறது.  அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.83 ரூபாயாக உள்ளது.

 

ஏற்றப் பங்குகள் :

ஹெச் சி எல் டெக்        4.84%

ஐ டி எஃப் சி                 3.75%

டெக் மஹிந்திரா 2.30%

ஹிண்டால்கோ 1.93%

விப்ரோ         1.87%

 

இறக்கப் பங்குகள் :

ஏசியன் பெயின்ட்ஸ்   -5.31%

பேங்க் ஆஃப் பரோடா        -3.29%

ஹெச் யூ எல்             -2.57%

டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் -2.45%

 

 

 9.45 மணி நிலவரம்

 

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 104.90 புள்ளிகள் குறைந்து 29078.86 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 21.20 புள்ளிகள் குறைந்து 8787.70 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது.

இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் 476 ரூபாய் விலை அதிகரித்து  27,895 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் 101 ரூபாய் அதிகரித்து 2,806 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.  அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.42 ரூபாயாக உள்ளது.

தற்போது இந்திய சந்தைகளில்  மூலதன பொருட்கள், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ்,  ஹெல்த் கேர், ஐ.டி ஆகிய துறை சார்ந்த பங்குகள் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன.   வங்கி, எஃப் எம் சி ஜி, பொதுத்துறை ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. 

 

ஏற்றப் பங்குகள் :

ஹெச் சி எல் டெக் 4.42%

டெக் மஹிந்திரா 2.28%

பி பி சி எல் 2.17%

பி என் பி 1.90%

சன் பார்மா 1.49%

 

இறக்கப் பங்குகள் :

ஏசிய பெயின்ட்ஸ் -3.71%

கோல் இந்தியா -2.58%

பஜாஜ் அட்டோ -2.35%

பேங்க் ஆஃப் பரோடா -2.10%

டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் -1.86%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP