Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சரிவில் முடிந்த பங்குச் சந்தைகள்!

சரிவில் முடிந்த பங்குச் சந்தைகள்!
 
இந்திய சந்தைகள் இன்றைய வர்த்தகத்தில் சரிவில் முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 122 புள்ளிகள் சரிந்து 29000 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 40 புள்ளிகள் சரிந்து 8756 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
இன்றைய வர்த்த்கத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 120 ரூபாய் அதிகரித்து 27,960 ரூபாய்க்கும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 126 ரூபாய் அதிகரித்து 3,179. ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  61.71 ரூபாயாக உள்ளது. 
இன்றைய வர்த்தகத்தில் வங்கித்துறை பங்குகள் சற்று இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
செஸா ஸ்டெர்லைட் 6.31
கெய்ர்ன் இந்தியா 4.09
பாரதி ஏர்டெல் 3.41
ரிலையன்ஸ் 3.25
ஓஎன்ஜிசி 2.74
 
விலை குறைந்த பங்குகள்:
 
பிஎன்பி -7.79
ஆக்சிஸ் பேங்க் -4.97
டாடா பவர் -4.17
பஜாஜ் ஆட்டோ -3.77
கோட்டக் மஹிந்தரா -3.41
 
2:30 மணி நிலவரம்:
 
இந்திய சந்தைகள் சரிவில் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 55 புள்ளிகள் சரிந்து 29067 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 16 புள்ளிகள் சரிந்து 8781 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
இன்றைய வர்த்த்கத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 75 ரூபாய் அதிகரித்து 27,915 ரூபாய்க்கும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 92 ரூபாய் அதிகரித்து 3,145 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  61.68 ரூபாயாக உள்ளது. 
இன்றைய வர்த்தகத்தில் வங்கித்துறை பங்குகள் சற்று இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. 
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
செஸா ஸ்டெர்லைட் 5.95
கெய்ர்ன் இந்தியா         3.48
பாரதி ஏர்டெல்         3.30
டாடா மோட்டார்ஸ் 2.95
ரிலையன்ஸ்         2.94
 
விலை குறைந்த பங்குகள்:
 
பிஎன்பி -7.04
பஜாஜ் ஆட்டோ -3.58
ஆக்ஸிஸ் வங்கி -3.55
டாடா பவர்         -3.46
எம்&எம்        -3.42
 
12:30 மணி நிலவரம்:
 
இந்திய சந்தைகள் சரிவில் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 217 புள்ளிகள் சரிந்து 28904 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 66 புள்ளிகள் சரிந்து 8730 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
இன்றைய வர்த்த்கத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 60 ரூபாய் அதிகரித்து 27,900 ரூபாய்க்கும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 51 ரூபாய் அதிகரித்து 3,104 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  61.80 ரூபாயாக உள்ளது. 
எஸ்.எல்.ஆர் குறைக்கப்பட்டிருந்தாலும் வட்டி விகிதங்கள் இன்னனும் எதிர்பார்த்த அளவுக்கு குறையாதது மட்டுமின்றி எந்தமாற்றமும் இல்லை என ஆர்பிஐ அறிவித்துள்ளதால் சந்தை இறக்கத்தில் வர்த்தகமாகிறது.
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
செஸா ஸ்டெர்லைட் 3.68
கெய்ர்ன் இந்தியா 2.95
கிராஸிம் 2.19
பாரதி ஏர்டெல் 1.93
ரிலையன்ஸ் 1.91
 
விலை குறைந்த பங்குகள்:
 
பிஎன்பி -6.47
பஜாஜ் ஆட்டோ -3.68
ஆக்ஸிஸ் வங்கி -3.37
ஹச்டிஎஃப்சி -3.02

கோட்டக் மஹிந்த்ரா -2.93

 ஏற்றத்தில் இந்திய சந்தைகள்

 
இன்றைய நாளின் துவக்கத்தில் பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. காலை 9:30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 67 புள்ளிகள் அதிகரித்து 29189 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 18 புள்ளிகள் அதிகரித்து 8815 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
இன்றைய வர்த்த்கத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 55 ரூபாய் குறைந்து 27,840 ரூபாய்க்கும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 198 ரூபாய் அதிகரித்து 3,053 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  61.68 ரூபாயாக உள்ளது. 
 
ஆர்பிஐயின் கடன் கொள்கை மீதான மதிப்பீடு மேலும் வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற நம்பிக்கையில் சந்தையில் ஏற்றம் காணப்படுகிறது. மேலும் ரகுராம் ராஜன் 25 அடிப்படை புள்ளிகளை குறைக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.
இன்றைய வர்த்தகத்தில் 537 பங்குகள் விலை அதிகரித்தும், 92 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின. 
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
அல்ட்ரா டெக் சிமெண்ட் 3.27
கெய்ர்ன் இந்தியா         2.67
ரிலையன்ஸ்         2.38
ஹச்யூஎல்                 2.14
செஸா ஸ்டெர்லைட் 1.87
 
விலை குறைந்த பங்குகள்:
 
பஜாஜ் ஆட்டோ -1.67
டாக்டர் ரெட்டி லேப் -1.63
ஹச்டிஎஃப்சி -1.21
ஆக்ஸிஸ் பேங்க் -1.06
ஹின்டால்கோ -0.962
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ