Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மெக்டொனால்ட், டோமினோஸை மிஞ்சியது ஹால்திராம்ஸ்

இந்தியாவை சேர்ந்த ஸ்னாக்ஸ் வகை உணவுகளை தயாரிக்கும் ஹால்திராம்ஸ் நிறுவனத்தின் வருமானம் 3500 கோடி ரூபாயாக உள்ளது. இது முன்னனி நிறுவனங்களான டோமினோஸ் மற்றும் மெக்டொனால்டின் இணைந்த வருவாயை காட்டிலும் அதிகமாகும். மேலும் மேகியின் வருமானத்தை விட மூன்று மடங்கு அதிகமான வருமானத்தை ஹால்திராம்ஸ் கொண்டுள்ளது.
 
2013-14 அறிக்கையின்படி ஸ்னாக்ஸ் வர்த்தகத்தில் 40 சதவிகித விற்பனையை ஹால்திராம்ஸ் கொண்டுள்ளது. இதனால் தான் இந்த நிறுவனம் முதன்மையான நிறுவனமாக விளங்குகிறது.
 
இந்தியாவில் 1937ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமான ஹால்திராம்ஸ் வெளிநாட்டு கம்பெணிகளுக்கு போட்டியளிக்க கூடிய நிறுவனமாக விளங்கிவருகிரது என்றும், மேலும் புதிதாக தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளதாக ஹால்திராம்ஸ் நிர்வாகம் கூறியுள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ