Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இனி ரயில் டிக்கெட்டுக்கும் கேஷ் ஆன் டெலிவரி!

ஆன்லைனில் பொருட்களை வாங்குபவர்கள் பெரும்பாலும் கேஷ் ஆன் டெலிவரிமுறையை தான் தேர்ந்தெடுப்பார்கள் . அதேபோல தற்போது ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் புக் செய்யும் போது அதற்கும் இந்த கேஷ் ஆன் டெலிவரி வழியை பயன்படுத்தலாம் என்ற வசதியை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தவுள்ளது.
 
இதன் மூலம் ஒரு பயணி ஆன்லைனில் இந்த முறையில் டிக்கெட் புக் செய்ய வேண்டும் எனில் ஐந்து நாட்களுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட்டை புக் செய்தால் வீட்டில் டிக்கெட் டெலிவரி செய்யப்படும். இதற்கான டெலிவரி கட்டணமாக படுக்கை வசதி கொண்ட சாதாரண வகுப்பு ரயிலுக்கு 40 ரூபாயும், ஏசி பெட்டிக்கு 60 ரூபாயும் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 
 
இதன் மூலம் கிரெடிட்/டெபிட் கார்டு இல்லாத பயணிகளை ஆன்லைன் படுத்த செய்யும் முயற்சியாகவும்,இதனை சோதனை முயற்சியாக 200 நகரங்களில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இனி டிக்கெட் எடுத்து விட்டு கையில் கிடைத்தால் மட்டுமே பணம் கொடுக்கலாம் என்பது மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ