Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

60 ரூபாய்க்கு கீழ் பெட்ரோல் விலை!

சமீப காலமாக சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. அதையடுத்து, பெட்ரோல் விலையையும் அடிக்கடி எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து வருகின்றன. அதேபோல் டீசல் விலையும் அவ்வப்போது குறைக்கப்படுகிறது.
 
இந்நிலையில், இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.42ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.25ம் குறைக்கப்பட்டுள்ளது.
 
இதன் படி சென்னையில் 61.38 ரூபாய் என்ற அளவில் இருந்த  ஒரு லிட்டர் பெட்ரோல் 2.50 ரூபாய் குறைந்து 58.88 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல் 51.34 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் டீசல் 2.43 ரூபாய் குறைந்து 48.91 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
 
இதன் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக பெட்ரோல் விலை 60 ரூபாய்க்கு கீழ் வர்த்தகமாகியுள்ளது. iதற்கு முன் 2010ம் ஆண்டில் பெட்ரோல் விலை 60 ரூபாய்க்கு கீழ் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆக்ஸ்ட் மாதத்தில் இருந்து பெட்ரோல் விலை 10 வது முறையாகவும், டீசல் விலை 6வது முறையாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
 
இந்த விலை குறைப்பு இன்று (3ஆம் தேதி) முதல் அமலுக்கு வரும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் இரு மற்றும் நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்றும்.அன்றாட பொருட்களின் விலையும் குறைய வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ