Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சரிவில் முடிந்த சந்தைகள்:

சரிவில் முடிந்த சந்தைகள்:
 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 117.03 புள்ளிகள் குறைந்து 28883.11 புள்ளிகள் என்ற அளவிலும் தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 32.85 புள்ளிகள் குறைந்து  8723.70 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 238 ரூபாய் அதிகரித்து 27,736 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 29 ரூபாய் குறைந்து 3,197 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.75 ரூபாயாக உள்ளது.
 
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸில் 1344 பங்குகள் விலை அதிகரித்தும், 1563 பங்குகள் விலை விலை குறைந்தும் வர்த்தகமாகின.

ஏற்றப் பங்குகள் :
 
ஹிண்டால்கோ 4.06
கெய்ர்ன் இந்தியா 3.46
டாடா பவர் 3.15
செஸா ஸ்டெர்லைட் 2.80
கோல் இந்தியா 2.64
 
இறக்கப் பங்குகள் :
 
ஆக்ஸிஸ் பேங்க் -4.77
பிஹச்இஎல் -4.07
எஸ்பிஐ -2.41
டெக் மஹிந்த்ரா -2.29

 

ஜி எண்டர்டெயிண்மென்ட் -2.12

12.30 மணி நிலவரம்

 

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 30.33 புள்ளிகள் குறைந்து 28969.81  புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 10.80 புள்ளிகள் குறைந்து  8754.75 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் தோராயமான இறக்க விகிதம் 0.11 சதவிகிதமாக இருக்கிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 88 ரூபாய் அதிகரித்து 27,586 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2801 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2619  ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 19 ரூபாய் அதிகரித்து 3,254 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. பிரன்ட் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 3.16 டாலர் அதிகரித்து 57.91 டாலருக்கு வர்த்தகமாகிறது. டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்ருக்கு 3.48 டாலர் அதிகரித்து 53.05 டாலருக்கு வர்த்தகமாகிறது.

தற்போது இந்திய சந்தைகளில் ஹெல்த் கேர், மெட்டல், ஸ்மால் கேப், பொதுத்துறை நிறுவனம் சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. வங்கி, ஆட்டோமொபைல், மூலதன பொருட்கள் போன்ற துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.

ஏற்றப் பங்குகள் :

கெர்ய்ன் இந்தியா 4.75

டி எல் எஃப்         3.67

சேசா ஸ்டெர்லைட் 3.56

ஓ என் ஜி சி          2.80

சன் பார்மா               2.31

இறக்கப் பங்குகள் :

ஆக்ஸிஸ் பேங்க்           -5.19

பி ஹெச் இ எல்            -3.01

ஜி என்டர்டெயின்மென்ட்      -2.29

டாடா மோட்டார்ஸ்           -2.25

 

 

 

 ஏற்றத்தில் இந்திய சந்தைகள் : 10 மணி நிலவரம்

 
இன்றைய நாளின் துவக்கத்தில் பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. காலை 10 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 18 புள்ளிகள் அதிகரித்து 29018 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 1 புள்ளி அதிகரித்து 8757 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
இன்றைய வர்த்த்கத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 342 ரூபாய் குறைந்து 27,498 ரூபாய்க்கும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 173 ரூபாய் அதிகரித்து 3,226 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  61.63 ரூபாயாக உள்ளது. 
 சர்வதேச சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. இன்றைய வர்த்தகத்தில் 492 பங்குகள் விலை அதிகரித்தும், 101 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின. 
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
கெய்ர்ன் இந்தியா 3.53
ஓஎன்ஜிசி 2.80
சன் பார்மா 2.25
செஸா ஸ்டெர்லைட் 1.52
ஹச்டிஎஃப்சி 1.50
 
விலை குறைந்த பங்குகள்:
 
ஆக்ஸிஸ் வங்கி -3.09
பிஹச்இஎல் -1.75
ஜி என்டர்டெயிண்மென்ட் -1.34
ஐசிஐசிஐ வங்கி -1.34
எஸ்பிஐ -1.30

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close