Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் முடிந்த பங்குச் சந்தை!


இறக்கத்தில் முடிந்த பங்குச் சந்தை!

இன்று ஏற்றத்தில் தொடங்கிய பங்குச் சந்தை இறக்கத்தில் முடிந்திருக்கிறது. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 32 புள்ளிகள் சரிந்து 28850.97 என்கிற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 12 புள்ளிகள் சரிந்து 8711.70 என்கிற நிலையிலும் முடிந்துள்ளது. இன்றைய பங்கு வர்த்தகத்தில் எஃப்எம்சிஜி மற்றும் ஐடி துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்திலும், ஆட்டோ, கேப்பிட்டல் கூட்ஸ், ஹெல்த்கேர், மெட்டல்ஸ் போன்ற துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாகின.

இன்றைய பங்கு வர்த்தகத்தில் 1037 பங்குகள் ஏற்றத்திலும், 1,870 பங்குகள் இறக்கத்திலும் மற்றும் 236 பங்குகள் எந்தவித மாற்றம் இல்லாமலும் வர்த்தகமாகின.

ஏற்றப்பங்குகள்:
பிபிசிஎல்                   750.00    4.02
ஹெச்சிஎல் டெக்       1,972.65    3.80
விப்ரோ                   638.25    3.08
இன்ஃபோஸிஸ்       2,193.80    2.38
டிசிஎஸ்                   2,552.40    1.52

இறக்கப்பங்குகள்:
டாடா பவர்                                83.30    -7.55
ஜிண்டால் ஸ்டீல்                    146.30    -4.88
சேஷா ஸ்டெர்லைட்        207.80    -4.06
பேங்க் ஆஃப் பரோடா        177.55    -3.98
ஓஎன்ஜிசி                                356.65    -3.23
 

 

11.30 மணி நிலவரம்:

இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை தொடர்ந்து ஏற்றத்திலேயே வர்த்தகமாகி வருகிறது.காலை 11.30 நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 124.10 புள்ளிகள் அதிகரித்து 290007.21 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 34.55 புள்ளி அதிகரித்து 8758.25 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.

சந்தை ஆரம்பிக்கும் போது 27,402 ரூபாயாக இருந்த  10 கிராம் தங்கத்தின் விலை தற்போது 228 ரூபாய் அதிகரித்து 27,630 ரூபாயாக காணப்படுகிறது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 68 ரூபாய் சரிந்து 2,996 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  61.89 ரூபாயாக உள்ளது.

பிபிசிஎல், ஹெச்சிஎல் டெக், விப்ரோ, ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி ஆகிய நிறுவனத்தின் பங்குகள் ஏற்றப்பங்குகளில் முதல் ஐந்து இடத்திலும், டாடா பவர் பேங்க் ஆஃப் பரோடா, ஓஎன்ஜிசி, கெய்ர்ன் இந்தியா மற்றும் கெயில் ஆகிய நிறுவனத்தின் பங்குகள் இறக்கப்பங்குகளில் முதல் ஐந்து இடத்திலும் வர்த்தகமாகின்றன.

9.30 மணி நிலவரம்:

இன்றைய நாளின் துவக்கத்தில் பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. காலை 9:30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 53 புள்ளிகள் அதிகரித்து 28935 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 14 புள்ளி அதிகரித்து 8738 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
இன்றைய வர்த்த்கத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 114 ரூபாய் அதிகரித்து 27,402 ரூபாய்க்கும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 168 ரூபாய் சரிந்து 3,064 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  61.75 ரூபாயாக உள்ளது. 
 
ஐரோப்பிய சந்தையில் கிரீக் கடன் பத்திரங்களை ஐரோப்பிய மத்திய வங்கி ஏற்க மறுப்பதால் யூரோவின் மதிப்பு குறைந்து வருகிறது. கச்சா எண்னெய் விலையிலும் நிலையற்ற தன்மையே நீடிக்கிறது.
இன்றைய வர்த்தகத்தில் ஆக்ஸிஸ் வங்கி மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் பங்குகள் விலை அதிகரித்து காணப்பட்டன.
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
ஆக்ஸிஸ் வங்கி 2.49
பிபிசிஎல் 2.47
ஏசியன் பெயிண்ட்ஸ் 1.62
கோல் இந்தியா 1.39
டெக் மஹிந்த்ரா 1.36 
 
விலை குறைந்த பங்குகள்:
 
கெய்ர்ன் இந்தியா -3.21
ஓஎன்ஜிசி -2.13
டாடா பவர் -1.55
சிப்லா -1.43
ஐசிஐசிஐ வங்கி -1.31
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ