Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வீடுகள் விற்பனை: டிசம்பர் காலாண்டில் 8% குறைவு!

வீடுகள் விற்பனை: டிசம்பர் காலாண்டில் 8% குறைவு!

கடந்த டிசம்பர் மாத காலாண்டு நிலவரப்படி, இந்தியாவின் ஆறு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனையானது 8% குறைந்து காணப்படுவதாக சொத்து ஆய்வறிக்கை நிறுவனமான லியாசெஸ் ஃபோராஸ் மேற்கொண்ட ஆய்வறிக்கையில் தெரியவந்திருக்கிறது. ஆனால் வீடுகளின் விலை மட்டும் சராசரியாக 7% அதிகரித்திருப்பதாக இவ்வாய்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த ஆறு நகரங்களில் விற்பனையாகாத வீடுகளின் மொத்த அளவு  832.09 மில்லியன் சதுர அடி. விற்பனையில் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது சென்னை. இங்கு மட்டும் 48% விற்பனை குறைந்திருக்கிறது. இதற்கு அடுத்து விற்பனை குறைவில் பெங்களூரு மற்றும் டெல்லி சதவிகிதங்கள் முறையே 25% மற்றும் 15 சதவிகிதமாக உள்ளன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ