Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரபிந்தோ பார்மா: நிகர லாபம் 7.93% குறைவு!

அரபிந்தோ பார்மா: நிகர லாபம் 7.93% குறைவு!

அரபிந்தோ பார்மா நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.417.49 கோடியிலிருந்து 384.35 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டு முடிவில் அந்நிறுவனமானது தெரிவித்துள்ளது. அதே சமயம் நிறுவனத்தின் நிகர விற்பனை 2,135.52 கோடி ரூபாயிலிருந்து 3,142.46 கோடி ரூபாயாக அதிகரித்து காணப்படுகிறது. நிறுவனத்தின் ஃபார்மலேஸன் விற்பனையானது 76.2 சதவிகிதம் அதிகரித்தும், 2,529.70 கோடி ரூபாயாகவும், தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கு தேவையான மருந்துப் பொருட்கள் (active pharmaceutical ingredients )
விற்பனை 9.4% குறைந்து 674.40 கோடி ரூபாயாகவும் இருக்கிறது.
 

இன்றைய பங்கு வர்த்தகத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு (12.10 மணி நிலவரப்படி) 65 ரூபாய் குறைந்து  1,141.05 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ