Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பார்தி ஏர்டெல்: நிகரலாபம் 1,437 கோடியாக அதிகரிப்பு!

பார்தி ஏர்டெல்: நிகரலாபம் 1,437 கோடியாக அதிகரிப்பு!

இந்திய டெலிகாம் ஆப்ரேட்டர்களில் டாப் நிறுவனமான பார்தி ஏர்டெல் சமீபத்தில் நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டு முடிவை வெளியிட்டது. பங்குச் சந்தை நிபுணர்கள் எதிர்பார்த்ததை விட  பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிகரலாபம் அதிகரித்திருக்கிறது. 2013-ம் ஆண்டின் டிசம்பர் காலாண்டில் 612 கோடி ரூபாயாக இருந்த இந்த நிறுவனத்தின் நிகர லாபம் மூன்று மடங்கு அதிகரித்து நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 1,437 கோடி ரூபாயாக காணப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 1.76 மில்லியன் வாடிக்கையாளர்கள் ஏர்டெலில் இணைந்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஸ்மார்ட்போன் விற்பனையும், அதில் பயன்படுத்தும் இன்டர்நெட் டேட்டா அதிகரிப்பும் தொடர்ந்து காணப்பட்டு வருகிறது. இது இந்த நிறுவனத்திற்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிகர விற்பனை 23,217 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் 21,939 கோடி ரூபாயாக இருந்தது.  இந்த நிறுவனத்திற்கு மொபைல் டேட்டா மூலம் மட்டுமே 62% வருமானம் அதிகரித்து 2,872 கோடி ரூபாயாக உள்ளது.
 

இருப்பினும், இன்றைய பங்கு வர்த்தகத்தில் 3.60 ரூபாய் குறைந்து 365.35 ரூபாய்க்கு (12.40மணி நிலவரப்படி) வர்த்தகமாகி வருகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ