Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பில்லியனர்கள் வாழும் நாடுகள்: இந்தியாவுக்கு 3-வது இடம்!

பில்லியனர்கள் வாழும் நாடுகள்: இந்தியாவுக்கு 3-வது இடம்!

அதிகமான பில்லியனர்கள் வாழும் நாடுகள் பட்டியலில் முதல்முறையாக இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. முதல் இடத்தில் அமெரிக்கா, இரண்டாவது இடத்தில் சீனாவைத் தொடர்ந்து நம் நாடு மூன்றாவது இடத்தில் இருப்பதாக சீன இதழ் ஹுருன் வெளியிட்டிருக்கும் "ஹுரூன் குளோபல் ரிச் லிஸ்ட் 2015" அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. இந்த தரவரிசைப் பட்டியலில் இந்தியாவில் வாழும் டாப் 10 பில்லியனர்கள்  விவரங்களையும் இந்த இதழானது சுட்டிக் காட்டியுள்ளது. இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ரூ.1.2 லட்சம் கோடி சொத்துடன் முதல் இடத்தையும், சன் பார்மா திலிப் சங்க்வி ரூ.1.02 லட்சம் கோடியுடன் இரண்டாவது இடத்தையும், டாடா சன் குழுமத்தைச் சேர்ந்த பலோன்ஜி மிஸ்த்ரி ரூ.96,000 கோடியுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றிருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் 2,089 பில்லியனர்கள் இருப்பதை சொல்லியிருக்கும் இந்த பத்திரிக்கையானது, இவர்களில் 97 பேர் இந்தியாவில் வசிக்கும் பில்லியனர்கள் என்பதையும் தெரிவித்துள்ளது. இந்த 97 பில்லியனர்களில் 41 பில்லியனர்கள் பரம்பரை வழி சொத்துக்களை கொண்டிருப்பவர்களாகவும், 56 பில்லியனர்கள் சுய சொத்துக்களை கொண்டிருப்பவர்களாகவும் இருக்கிறார்களாம். உலக அளவிலான பில்லியனர்கள் பட்டியலில் 85 பில்லியன் டாலர் மதிப்புடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதல் இடத்தில் இருக்கிறார்.

இந்தியாவின் பெண் பில்லியனர்களில் சாவித்ரி ஜிண்டால் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 16,200 கோடி ரூபாயுடன் முதல் இடத்திலும், பென்னட் கோல்மன் நிறுவனத்தின் இந்து ஜெய்ன் 15,000 கோடியுடன் இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்கள்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP