Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் நிறைவடைந்த இன்றைய சந்தை.

 

3.30 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 133.06 புள்ளிகள் குறைந்து 28717.91 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 50.65 புள்ளிகள் குறைந்து 8661.05 புள்ளிகளுக்கு வர்த்தகமானது.

10 கிராம் தங்கத்தின் விலை 62 ரூபாய் அதிகரித்து 27,363 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 43 ரூபாய் அதிகரித்து   3,230 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.74 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

 இந்திய சந்தைகளில்  வர்த்தக முடிவில் ஐ.டி, டெக்னாலஜி, எஃப் எம் சி ஜி ஆகிய துறை சார்ந்த பங்குகள் தொடர்ந்து ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஆட்டோமொபைல், வங்கி, மூலதன பொருட்கள், எண்ணெய் மற்றும் காஸ் ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. 

மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் 2,972 நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகமாயின. அதில் 860 நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், 2,014 நிறுவனங்களின் பங்குகள் இறக்கத்திலும், 98 நிறுவனங்களின் பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. தேசிய பங்குச் சந்தையில் 15 நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், 35 நிறுவன பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.

உலக  வர்த்தகத்தில் பெரிய மாற்றங்கள் இன்ரி பகல் 1.45 மணி நிலவரமே நீடிக்கிறது.

ஏற்றப் பங்குகள் :

கெர்ய்ன் இந்தியா        3.06%

ஹெச் டி எஃப் சி         2.82%

என்எம்டிசி                 1.23%

இன்ஃபோசிஸ்          2.06%

சேசா ஸ்டெர்லைட்  1.35%

 

இறக்கப் பங்குகள் :

டாடா மோட்டார்ஸ் -5.02%

பி ஹெச் இ எல் -4.59%

டி எல் எஃப்                 -3.51%

சன் பார்மா                 -3.41%

ஜிண்டால் ஸ்டீல்          -2.90%

 

1.45 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 64.81 புள்ளிகள் குறைந்து 28786.16 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 26.20 புள்ளிகள் குறைந்து 8685.50 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 72 ரூபாய் அதிகரித்து 27,373 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 11 ரூபாய் குறைந்து  3,176 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.78 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

தற்போது இந்திய சந்தைகளில் ஐ.டி, டெக்னாலஜி, எஃப் எம் சி ஜி ஆகிய துறை சார்ந்த பங்குகள் தொடர்ந்து ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஆட்டோமொபைல், வங்கி, மூலதன பொருட்கள், எண்ணெய் மற்றும் காஸ் ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.

உலக அளவில் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. ஆசிய சந்தைகளில் நிக்கி, ஸ்ட்ரைட் டைம்ஸ், கோஸ்பி, எஸ்.இ.டி காம்போஸைட், ஜகர்தா காம்போஸைட் போன்ற சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. மற்ற சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.

 

ஏற்றப் பங்குகள் :

கெர்ய்ன் இந்தியா 3.06%

ஹெச் டி எஃப் சி 2.82%

சிப்லா 2.11%

இன்ஃபோசிஸ் 2.06%

என்எம்டிசி 1.23%

 

இறக்கப் பங்குகள் :

டாடா மோட்டார்ஸ் -5.56%

ஜிண்டால் ஸ்டீல்         -3.02%

கெயில்        -2.94%

எம் அண்ட் எம்        -2.78%

பிபிசிஎல்               -2.77%

 

 

 

11.45 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 33.85 புள்ளிகள் குறைந்து 28817.12 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 17.60 புள்ளிகள் குறைந்து 8694.10 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 127 ரூபாய் அதிகரித்து 27,428 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2816 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2633 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 20 ரூபாய் அதிகரித்து 3,207 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. பிரன்ட் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 2.41 டாலர் அதிகரித்து 56.57 டாலருக்கு வர்த்தகமாகிறது. டபிள்யு.டி.ஐ கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 2.03 டாலர் அதிகரித்து 50.48 டாலருக்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.73 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

தற்போது இந்திய சந்தைகளில் ஐ.டி, டெக்னாலஜி, எஃப் எம் சி ஜி ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஆட்டோமொபைல், வங்கி, மூலதன பொருட்கள் ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.

ஏற்றப் பங்குகள் :

கெர்ய்ன் இந்தியா 2.94

ஹெச்டிஎஃப்சி         2.93

சிப்லா         1.80

பி என் பி        1.52

டி சி எஸ்           1.35

இறக்கப் பங்குகள் :

டாடா மோட்டார்ஸ் -5.22

ஜிண்டால் ஸ்டீல்      -3.11

கெயில்          -2.82

எம் அண்ட் எம்         -2.39

 

 

 

 

ஏற்றத்தில் இந்திய சந்தைகள்!
 
9.30 மணி நிலவரம்:
இன்றைய நாளின் துவக்கத்தில் பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. காலை 9:30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 28 புள்ளிகள் அதிகரித்து 28878 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 3 புள்ளி அதிகரித்து 8714 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
இன்றைய வர்த்த்கத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 101 ரூபாய் சரிந்து  27,301 ரூபாய்க்கும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 123 ரூபாய் அதிகரித்து 3,187 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  61.73 ரூபாயாக உள்ளது. 
 
ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகிறது. ஆசிய சந்தைகள் ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. கச்சா எண்னெய் விலையிலும் நிலையற்ற தன்மையே நீடிக்கிறது.
 
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
கெய்ர்ன் இந்தியா 2.63
விப்ரோ 2.44
இன்ஃபோசிஸ் 2.40
சிப்லா         2.14
டிசிஎஸ் 1.53
 
விலை குறைந்த பங்குகள்:
 
டாடா மோட்டார்ஸ் -4.85
கெயில் -2.34
பாங்க் ஆஃப் பரோடா -2.08
எம்&எம்         -1.87
சன் பார்மா         -1.56
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ