Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆன்லைன் மூலம் நிதிச் சேவை: அதிகரிக்கும் மக்களின் ஆர்வம்!

ஆன்லைன் மூலம் நிதிச் சேவை: அதிகரிக்கும் மக்களின் ஆர்வம்!

நிதிச் சேவையை ஆன்லைனில் பெறுவதில் எழுச்சி ஏற்பட்டுள்ளதாகவும், வங்கிக் கடன் குறித்த தகவல்களை இணையதளம் வாயிலாக விசாரிப்பவர்கள் எண்ணிக்கை 74 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் பேங்க்பசார்.காம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை வாயிலாக தெரிய வந்துள்ளது.

இந்நிறுவனம் ஆன்லைன் மூலம் நிதித் திட்டங்கள் குறித்த சேவையை அளிப்பதில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிறுவனம் ‘ஆன் லைனில் நிதிச் சேவைகளைப் பெறுவதில் வாடிக்கையாளர்களின் அணுகுமுறை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் வழக்கமான முறைக்கு பதிலாக ஆன்லைன் மூலம் நிதிச் சேவைகளை பெறுவதில் மக்களின் ஆர்வம் அதிகரித்து வருவதாகவும், இந்த ஆண்டில் இதில் ஒரு புதிய அத்தியாயம் உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வாயிலாக சேவையை பெறுவது எளிதாக உள்ளதுடன் நேரமும் மிச்சமாவதாகவும் வாடிக்கையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

46-லிருந்து 74 சதவிகிதமாக அதிகரிப்பு!
இந்தியாவில் முன்னணி 10 நகரங்களில் உள்ள இளைஞர்களில் (40 வயதிற்கு குறைவானவர்கள்) வங்கிக் கடனிற்காக விண்ணப்பிப்பதற்கு முன்னர் அது குறித்த விவரங்களை ஆன்லைனில் விசாரிக்கத் தொடங்கி உள்ளனர் என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்னர் வங்கிக் கடனைப் பெற்றவர்களில் 74 சதவீதத்தினர் அது பற்றிய விவரங்களை ஆன்லைனில் விசாரித்துள்ளனர். இது ஓராண்டிற்கு முன்னர் 46 சதவீதமாக இருந்தது. வங்கிகளுக்கு நேரடியாக செல்வதற்கு பதில் வலைதளங்கள் வாயிலாக சேவையைப் பெறுவதில் மக்கள் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்.

நேரடியாக வங்கியில் விசாரிப்பவர்கள் 15%!
கடனிற்காக விண்ணப்பிப்பதற்கு முன்னர் அது குறித்த விவரங்களை வலை தளங்களில் ஒப்பிட்டு பார்த்துள்ளதாக ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 75 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களை விட தற்போது வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவைப்படும் விவரங்களை முழு அளவில் தெளிவாக தெரிந்து கொள்ள விரும்புகின்றனர் என ஆய்வு அறிக்கை முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆன்லைன் வாடிக்கையாளர்களில் 31 சதவீதத்தினர் அவர்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகளில் மட்டுமின்றி இதர வங்கிகளிலும் தகவல்களை விசாரித்துள்ளனர். நேரடியாக வங்கிகளை அணுகும் வாடிக்கையாளர்களை பொருத்தமட்டில் இது 15 சதவீதமாகத்தான் உள்ளது.

சமூக வலைதளங்களில் அறிவுப் பகிர்வு!
சேவை சம்பந்தமான விவரங்களை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்வதில் சமூக வலைதளங்கள் மற்றும் ஆன்லைன் போர்ட்டல்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இளைஞர்களில் 62 சதவீதத்தினர் சம்பந்தப்பட்ட வங்கிகள் பற்றிய விவரங்களை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். அதே சமயம் நிதி ஆலோசகர்கள் மற்றும் மக்கள் தொடர்பு மேலாளர்கள் விஷயத்தில் இது 11 சதவீதமாகத்தான் உள்ளது.

பேங்க்பசார்.காமின் பங்கு!
நவீன தொழில்நுட்பத் திறனுடன் பேங்க்பசார்.காம் வடிவமைக்கப்பட்டுள்ள பேங்க்பசார்.காமில் கடன் பற்றிய விவரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எனவே எந்த ஒரு வாடிக்கையாளரும் விவரங்களை உடனடியாக எளிதில் தெரிந்து கொள்ளலாம். விவரங்களை ஒப்பிட்டுப்பார்த்து ஆய்வு செய்து தமது தேவை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப கடன், கடன் அட்டை, காப்பீட்டு திட்டங்களுக்கு விண்ணப்பித்து முழு சேவையையும் பெற்றுக்கொள்ளாலாம்.

இந்தியாவிலுள்ள 22-க்கும் மேற்பட்ட முன்னணி நிதி நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் இதனுடன் தொடர்பு வைத்துள்ளன. அதனால் ஆன்லைனில் பொருளை வாங்குவது போன்று வங்கி சேவையும் எளிதாக மாறி உள்ளது. இந்தச் சேவையை ஷாப்பிங் செய்வது போன்று மகிழ்ச்சி கரமாகவும், முழு திருப்தியுடனும் வெளிப்படையாகவும் பெறலாம். பேங்க்பசார்.காம் வெளிப்படையாக சேவைக் கட்டணத்தை நிர்ணயம் செய்கிறது. எனவே வாடிக்கையாளர்கள் இதனால் பயன் பெறுவர். ஏனென்றால் சந்தையில் பல நிறுவனங்கள் உள்ள நிலையில் யாரும் குறைந்த விலையைக் குறிப்பிடுவதில்லை.

பேங்க்பசார்.காம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு.ஆதிஷ் ஷெட்டி கூறுகையில், ''கடந்த மூன்று மாதங்களில் பேங்க்பசார்.காம் மூன்று மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் நிதி சேவையை டிஜிட்டல் முறையில் வழங்குவதில் ஒரு மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. வீடுகளை நோக்கி எமது பிராண்டை பிரபலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இதனால் வங்கி சேவையில் இந்தியாவில் ஒரு திருப்புமுனை ஏற்படும். பேங்க்பசார்.காம் வாயிலாக ஆன்லைன் சேவையை பெறுபவர்களுக்கு அவர்கள் விரும்பும் சேவையை பெறும் வசதி வாடிக்கையாளர் நலன், உடனடியாக விண்ணப்பிக்கும் வசதி போன்ற நன்மைகள் உள்ளன. மேலும் சிறந்த முறையில் இங்கு சேவை அளிக்கப்படுகிறது. எனவே தற்போது வங்கிச் சேவை விண்ணப்பத்திலிருந்து ஷாப்பிங் முறைக்கு மாறி உள்ளது'' என்று தெரிவித்தார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ