Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய மியூச்சுவல் ஃபண்டு புதிய உச்சம்...!

 
இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை ஜனவரி மாதம் மட்டும் 1,06,878 கோடி ரூபாய் முதலீடாக பெறப்பட்டிருக்கிறது.  மொத்தமாக  11.81 லட்சம் கோடி ரூபாயை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகித்து வருகின்றன. இது இந்திய பங்குச் சந்தையில் ஒரு புதிய உச்சம் என்பதை இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.
 
ஜனவரி மாதத்தில் மட்டும் நிஃப்டி 6.49 சதவிகித வளர்ச்சி கண்டிருக்கிறது. ஜனவரியில் மட்டும் ஏழு புதிய ஈக்விட்டி ஸ்கீம்களும், ஒரு இஎல்எஸ்எஸ் ஸ்கீமும், 21 புதிய கடன் சார்ந்த இன்கம் ஃபண்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
 
ஜனவரி 2015ல் லிக்விட் ஃபண்டுகளில் மட்டும்  85,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடாக பெறப்பட்டிருக்கிறது.  அதனைத் தொடர்ந்து இன்கம் ஃபண்டுகள் மூலம் 12,163 கோடி ரூபாய் முதலீட்டாக பெறப்பட்டுள்ளது. ஈக்விட்டி ஃபண்டுகளில் 5,850 கோடி ரூபாய் முதலீடாக பெறப்பட்டிருக்கிறது. இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருவதற்கு இதுவே ஆதாரம் என்றும் கூறப்படுகிறது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close