Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி A-Z தொடர் 23

கமாடிட்டி வியாபாரம் 23

 


தி.ரா.அருள்ராஜன் 

தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

 

 கமாடிட்டி சந்தை என்பது அடிப்படையில் பியூச்சர்ஸ் வியாபாரம் என்பதால், நாம் இதை வியாபார நோக்கத்துடன் மட்டுமே பார்க்கவேண்டும் என்பது பொதுவான விதிமுறை.

வியாபாரம் என்று சொல்லும்போது, இதை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

  1. தினசரி வியாபாரம்

  2. ஸ்விங் வியாபாரம் (பொஷிஷன் வியாபாரம்)

இரண்டிலுமே நமக்கு காலகெடு உள்ளது. எனவே வாங்கியதை அன்றே விற்கிறோமா அல்லது வைத்திருந்து சில நாட்கள் அல்லது வாரங்கள் வைத்து விற்கிறோமா, என்பதை எல்லாம் தாண்டி, வாங்கியதை விற்கவேண்டிய கட்டாயத்தில் இருகிறோம்.

அதில், இன்னும் ஒரு விஷயம் கவனிக்கவேண்டியது என்னவென்றால், எந்த வியாபரத்தையும் ஒரு காலகெடுவுக்குள் முடிக்கவேண்டும் என்ற கட்டாயம் வரும்போது நமக்குள் பிரஷர் வர ஆரம்பிக்கிறது.

அடுத்து தினசரி வியாபாரம் செய்யும்போது, மார்ஜின் தொகை குறைவாக இருந்தாலும், புரோக்கர்களால், அனுமதிக்கப்படுகிறது. ஆனால், அதையே நீங்கள் அடுத்த நாளுக்கு கேரி பண்ணும்போது, எக்ஸ்சேஞ் நிர்ணயம் செய்த முழுதொகையையும் கட்டவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இப்போது, இன்ட்ரா டே வியாபாரம் பண்ணலாம், என்று நினைத்து குறைந்த முதலீட்டுடன் (மார்ஜின் தொகை) வியாபாரத்தில் இறங்கும்போது, ஏதோ ஒரு காரணத்திற்காக, அதை அடுத்த நாளுக்கு கேரி பண்ணும்போது, அதிக பணம் கட்டவேண்டும் என்பது, அடுத்த பிரஷர்.

பொதுவாக தினசரி வியாபாரத்தில் இருந்து அடுத்த நாளுக்கு எப்போது நாம், கேரி பண்ணுவோம் என்றால், அதை இரண்டு சூழ்நிலையில் சொல்லலாம்.

  1. லாபத்தில் இருக்கிறோம். இன்னும் நன்கு ஏறி அதிக லாபத்தை கொடுக்கும் என்று நம்புகிறோம்.

  2. வாங்கிய விலையைவிட குறைவாக அந்த நாள் முடிகிறது. நட்டத்தை ஏற்க மனசு வலிக்கிறது. எனவே, அடுத்த நாளாவது கொஞ்சம் ஏறி நாம் வாங்கிய விலைக்கு வராதா? என்ற ஏக்கத்துடன் இருப்பது.

இதில் முன்னதாக உள்ள, லாபத்தில் இருக்கக்கூடிய சூழ்நிலையில், பொஷிஷனை கேரி பண்ணுவது என்பது சந்தோஷமான விஷயம். எனவே அப்போது அதிக பணம் கட்டுவது, அதாவது முழு மார்ஜின் தொகையை கட்டுவது என்பது, எப்பாடுபட்டாவது கட்ட முயற்சிப்போம். அட கடன் வாங்கியாவது கட்டிவிடுவோம்.

ஆனால், இரண்டாவது சூழ்நிலையான நட்டத்தில் இருக்கும்போது, அந்த பொஷிஷனை கேரி பண்ணுவது என்பது, ஒன்று வலி, இரண்டவாது, கூடுதல் பிரஷர்.

இது பியூச்சர்ஸ் வியாபாரம் என்பதால், லாட் அளவில் வாங்கவேண்டிய கட்டாயம். இப்போது ஒரு லாட்டுக்கு பதிலாக இரண்டு லாட்டோ அல்லது நாலு லாட்டோ அல்லது இன்னும் அதிகமாக வாங்கி இருந்து, விலை குறைந்து நட்டத்தில் இருக்கும்போது, அடுத்த நாளுக்கு கேரி பண்ணும்போது, இன்னும் பிரஷரோ பிரஷர்.

இப்படி நட்டத்துடன் இருக்கும்போது, வாங்கியவிலையைவிட, நடப்பு விலை மிகக்குறைவாக மாறும்போது, நமக்கு இன்னும் ஒரு விஷயத்தையும் செய்யத்தூண்டும். அதுதான் அவரெஜிங். அதாவது, ஏற்கெனவே அதிக விலையில் ஒரு லாட் வாங்கிய நிலையில், விலை குறையும்போது, இன்னும் ஒரு லாட் வாங்குவது.

இந்த சூழ்நிலையில் ஏற்கெனவே ஒரு லாட் வாங்கி நட்டத்தில் இருக்கிறோம். பின் இறங்கும்போது இன்னும் ஒருலாட் வாங்குகிறோம். இப்படி இன்னும் ஒரு லாட் வாங்கி பின், தொடரந்து விலை இறங்கும்போது, இன்னும் பிரஷர் கூடுகிறது.

இப்போது அவரெஜ் பண்ணியது தப்பா அல்லது சரியா? இது ஒரு கேள்வி.

இப்ப நாம படிக்கிறது எல்லாமே என்ன பிரஷர் குக்கர் விஷயமா இருக்கே என்று உள்கள் மனதில் கேள்விகள் ஓடலாம்.

வியாபாரம் என்று வரும்போது நமக்கு பணரீதியாக என்ன நடக்கிறது? மற்றும் மனரீதியாக என்ன நடக்கிறது? என்று நாம் தெரிந்து கொள்ளவேண்டும். ஏனெனில், அடுத்தடுத்து நாம் எடுக்கக்கூடிய முடிவுகளில் அதன் தாக்கம் தெளிவாக இருக்கிறது.

அதாவது ஒரு பொஷிஷனை எடுத்த பிறகு நாம் அடுத்து எடுக்கவேண்டிய முடிவுகள், நம் உடலில் ஏற்படும் பிரஷரின் அடிப்படையிலேயே இருக்கும். பிரஷர் குறைவாக இருந்தால் ஒரு மாதிரியான முடிவையும், பிரஷர் கூடுதலாக இருந்தால் நாம் வேறுமாதிரியான முடிவையும் எடுப்போம்.

எப்போது பிரஷர் குறைவாக இருக்கும், நாம் ஒரு பொருளை வாங்கிய பிறகு, வாங்கிய விலைக்கு, அதன் விலை ஏறி லாபத்தில் இருந்தால் பிரஷர் குறைவாக இருக்கும். இப்போது நாம் எடுக்கவேண்டிய முடிவுகள் என்ன? இப்போது உள்ள லாபத்தில் விற்றுவிடலாமா அல்லது இன்னும் கொஞ்சம் லாபம் வரட்டும் என்று காத்திருக்கலாமா?

இந்த நிலையில் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் நமக்கு சாதகமாகவே இருக்கும்.

லாபத்துடன் இருக்கும் சூழலுக்கே இன்னும் ஒரு பக்கம் இருக்கம் இருக்கிறது.

அது என்னவென்றால், நாம் வாங்கிய பிறகு லாபத்தில் இருக்கிறோம். இன்னும் கொஞ்சம் லாபம் வருகிறது. சந்தோஷபடுகிறோம். விற்றுவிடுகிறோமா என்றால் இல்லை. இன்னும கொஞ்சம் லாபம் வருகிறது. இப்போது விற்றுவிடுகிறோமா என்றால், இல்லை இன்னும் கொஞ்சம் சந்தோஷப்படுகிறோம்.

இப்படியே சந்தோஷப்பட்டுக்கொண்டு இருந்தால், எப்போதுதான் விற்பது.

மனதில் இந்த கேள்வி கண்டிப்பாக ஓடும். கூடவே நீங்க பதிலும் சொல்லுவீர்கள்.

இப்ப கொஞ்சம் லாபம் வந்தவுடே வித்திட சொல்லிறியே, நேத்து எனக்கு எவ்வளவு நட்டம் தெரியுமா?

நேத்தைவிடுங்க, முந்தாநேத்து எனக்கு எவ்வளவு நட்டம் தெரியுமா?

அதைக்கூட விடுங்க.... இதுவரைக்கும் எனக்கு எவ்வளவு நட்டம் என்று தெரியுமா?

இவ்வளவு நட்டத்தை நான் வைத்திருக்கிறேன். ஏதோ கொஞ்சம் லாபம் வந்தவுடனே, எப்ப விப்பீங்க, எப்ப விப்பீங்க......ன்னு ஒரு கேள்வி.

கேள்வியும் நானே, பதிலும் நானே....

எப்ப விப்பீங்க என்ற கேள்விக்கு, இப்படி ஆணி அடித்தமாதிரி நாம நமக்குள் பதிலை சொன்னபிறகு, நாம் லாபத்தில் இருக்கும் நிலையில் விற்போமா?

கண்டிப்பாக விற்கமாட்டோம்.

போகட்டும்.... இன்னும் போகட்டும் என்று காத்திருப்போம்.

இன்னும் ஏறி கொழுத்த லாபத்துடன் இருப்போம். இப்போதும் உள்மனசு ஒரு கேள்வி கேட்கிறது. இப்போதாது விற்போமா?

நமக்கு கோபம்தான் வருகிறது. ஏன் விற்கவேண்டும், லெட் த பிராஃபிட் ரன், அப்படின்னு கேள்விபட்டதில்லையா? சுருக்கென்று கேட்கிறோம். அன்று சந்தை முடிகிறது. நமக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. ஆனால் விற்கவில்லை. நல்ல லாபத்திறக்காக இன்னும் காத்திருக்கிறோம். நாம் அடைந்த எல்லா நட்டத்தையும், இந்த டிரேடில் எடுத்துவிட நினைக்கிறோம். அதற்க்கு ஏற்றவாறு விலையும் கூடிக்கொண்டே போகிறது. சந்தை அன்று ஒரு பெரிய உச்சத்தில் முடிகிறது. நாமும், கலர் கலராய் கனவு கண்டுகொண்டே உறங்குகிறோம்.

அடுத்தநாள் சந்தையை பார்க்க ஆவலுடன், எதிர் நோக்கி காத்திருக்கிறோம். சந்தையும் 10 மணிக்கு துவங்குகிறது.

வாவ்வ்வ்...........

சந்தை ஒரு நல்ல கேப் அப்புடன் துவங்குகிறது. நேற்று முடிந்த லாபத்தைவிட இன்று காலையிலேயே கணிசமான லாபத்துடன் இருக்கிறோம். மனசு ரெக்ககட்டி பறக்குது.

இப்போது நம்ம பொஷிஷனை விக்கலாமா என்ற எண்ணம் கொஞ்சம்கூட வரல. கேப் அப்பில் துவங்கிய சந்தை மெள்ள மெள்ள இறங்க ஆரம்பிக்கிறது. பின் மெள்ள இறங்க முந்தைய நாளின் முடிவு விலைக்கு அருகில் வருகிறது. நாம் சந்தையை கொஞ்சம் ஆச்சரியத்துடன் பார்கிறோம்.

ஏன் இறங்குகிறது?

விலையானது, நேற்றைய முடிவு விலைக்கு அருகில் வந்து, தயங்கி நிற்க்கிறது. பின் மெள்ள மேலே எழ ஆரம்பிக்கிறது. மனதில் ஒரு சாந்தி பிறக்கிறது. அப்பாடா இப்ப ஏற ஆரம்பிடுச்சிடுச்சி. ஆனால், அது நீடிக்கவில்லை. மீண்டும் இறக்கம் தொடர்ந்து முந்தைய நாளின் முடிவு விலையை தாண்டி இறங்கும்போது, இறக்கம் வேகம் பிடிக்கிறது.

என்ன.... ஏது.... என்று பார்ப்பதற்க்குள், விலையானது, நேற்றைய முழு ஏற்றத்தையும் இழந்து, நாம் வாங்கிவிலைக்கு அருகில் வருகிறது.

இப்போதுதான், நாம் நிஜநிலைமைக்கு திரும்புகிறோம்.

அடடா.... நேற்று அத்தை லாபம் இருந்ததே விற்று இருக்கலாமே. இன்று காலையில்கூட கேப் அப்பில் நல்ல லாபம் இருந்ததே, அப்பகூட வித்திருக்கலாமே?

இப்ப எல்லா லாபமும்போய், வாங்கின விலைக்கு அருகே நிக்குதே. இனி என்ன செய்ய?

மனதில் குழப்பம் படருகிறது.

இந்த குழப்பம்தான் நம்மை செயலற்ற மனிதராக மாற்றுகிறது. டிரேடிங் ஸ்கீரினை பார்த்துக்கொண்டே இருக்கிறோம். விலை நாம் முந்தைய நாள் வாங்கியதைவிட குறைந்து போகிறது.

விலை குறைகிறது....

விலை குறைகிறது......

ஆனால், நம் மூளைக்கு அது உறைக்கவில்லை. கோமா நோயாளியைப்போல், அதற்க்கும் நமக்கு சம்பந்தம் இல்லை என்பதுபோல், அப்படியே உற்று பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

ஒரு கட்டத்தில் விலை பெரிய அளவில் சரிகிறது. இப்போது நம்முடைய நட்டம் என்பது கணிசமான அளவைத்தாண்டிவிட்டது.

நாம் ஏதாவது சூடான பொருளில் கைவித்தால், சில வினாடிகள் கழித்துதான், நமக்கு அந்த சூடு உறைக்கும். அப்போதுதான் நாம் ஹா.... என்போம்.

அதுபோல, இங்கு நட்டத்தின் அளவு பெரிய அளவின் கூடும்போது, அது நம் தாங்கும் திறனைவிட அதிகமாகும்போது நாம் உடைந்து போகிறோம்.

முடியலீங்க......

ஏம்பா, மார்ஜின் பணத்தில, நட்டம்போக மீதி எவ்வளவு இருக்கு?

இல்ல சார், எல்லாமே காலி அயிடிச்சி...

சரிப்பா..... என்னோட பொஷிஷனை மொத்தமா வித்துடு.

நமக்கு வாழ்க்கையே வெறுக்கிறது. இந்த மார்கெட்டும் சரியில்ல, சுத்தி இருக்கிற மனுசங்களும் சரியில்ல. மனசு எல்லோரையும் வெறுக்கிறது.

இதில் நாம் மறந்த ஒரு விஷயம் என்ன?

நாம் ஒரு பொருளை வாங்கிய பிறகு

லாபம்,

நல்ல லாபம்

பெரிய பெரிய லாபம் என்று வரும்போதெல்லாம், எடுக்க மனசு வரவில்லை. அந்த வியாபாரத்தில் வரும் லாபத்தை, அந்த வியாபராத்தின் லாபமாக பார்க்காமல், நாம் ஒட்டு மொத்தமாக இழந்ததை, இந்த ஒரே டிரேடில் எடுத்துவிடலாம் என்று நினைத்தோம்.

இப்படி நினைப்பது தவறு.

அந்தந்த வியாபாரத்திற்க்கு உண்டான லாபத்தை அவ்வப்போது எடுக்கவேண்டும்.

என்ன சார்..... இதை ஒத்துக்கிறீங்களா?

கேள்வி நமக்குக்தான். இப்ப நம்ம மனசு சொல்லும், ஒத்துக்கிறேன், ஒத்துக்கிறேன், ஒத்துக்கிறேன்.

ஆனா, அடுத்த முறை நாம லாபத்தில இருக்கும்போது, சார் வித்திடலாமா? இல்லப்பா... இன்னும் கொஞ்சம் போவட்டும். நேத்து எனக்கு எவ்வளவு லாஸ் தெரியுமா?

டிரேடிங் மனசு சம்பந்தப்பட்ட விஷயமும் கூட.....

இன்னும் மனசு என்ன சொல்லும்தான் தொடர்ந்து பார்ப்போம்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP