Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாணயம் விகடனுக்கு டாடா இன்ஸ்டிடியூட் பாராட்டு!

 டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸஸ் என்னும் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனம், மல்ட்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் மற்றும் ஃபைனான்ஷியல் டெக்னாலஜீஸ் நாலேட்ஜ் மேனேஜ்மென்ட் கம்பெனியுடன் சேர்ந்து 'எ மில்லியன் ஜாப் அண்டு எ மில்லியன் ஆப்பர்ச்சூனிட்டீஸ்’ என்கிற புத்தகத்தை வெளியிட்டுள்ளது. கமாடிட்டி சந்தையில் வர்த்தகம் செய்யும் பல்வேறு தரப்பினரின் அனுபவங்கள் இந்தப் புத்தகத்தில் பேட்டிகளாக வெளியிடப்பட்டுள்ளன.  

கமாடிட்டி சந்தை பற்றிய விழிப்பு உணர்வை விவசாயிகளுக்கும், டிரேடர்களுக்கும், சாதாரண மனிதர்களுக்கும் எடுத்துச் சொல்லி ஊக்கப்படுத்தி வருபவர்கள் குறித்தும் இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்த வரிசையில் நாணயம் விகடனையும் வெகுவாகப் பாராட்டி எழுதியுள்ளது இந்தப் புத்தகம்.

''ஐந்து லட்சத்துக்கும் அதிகமான வாசகர்களைக்கொண்ட நாணயம் விகடன், கமாடிட்டி சந்தை பற்றி விளக்கமாக எழுதி வருகிறது. கமாடிட்டி பற்றிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்கிற மாதிரி தமிழகம் முழுக்க பல நகரங்களில் விழிப்பு உணர்வு கூட்டங்களையும் நடத்தி வருகிறது. கமாடிட்டி பற்றி தெரிந்துகொள்ள நினைக்கும் வாசகர்களின் ஏகோபித்த ஆதரவு நாணயம் விகடனுக்கு முழுமையாக கிடைத்திருக்கிறது'' என்று பாராட்டி இருக்கிறது.

வாசகர்களின் பல்வேறு நிதித் தேவைகளை நிறைவேற்றுவதில் நாணயம் விகடன் என்றைக்கும் முன்னணியில் நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை!

 

(நாணயம் விகடன் 21.07.2013 இதழில் இருந்து)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ