Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மெடிக்ளைம், ஹெல்த் இன்ஷூரன்ஸ் வேறுபாடு..!

மருத்துவச் சிகிச்சைக்குச் செலவான தொகையை ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி மூலமா க்ளைம் செஞ்சு வாங்கிக்கிடறதுதான் ‘மெடிக்ளைம்.’ கிளைம்னு சொன்னாலே கொஞ்சம் நெகட்டிவ்வான அர்த்தம் தருதுன்னு இப்போ பலரும் இதை ‘ஹெல்த் இன்ஷூரன்ஸ்’னுச் சொல்றாங்க.
இப்போ மெடிக்ளைம்னா குறுகிய காலத் திட்டம், ஹெல்த் இன்ஷூரன்ஸ்னா நீண்டகாலத் திட்டம்னு பிரிச்சிருக்காங்க.

சரி எடுக்கறதுன்னு முடிவாகிடுச்சு... எவ்வளவு தொகைக்கு எடுக்கலாம்? இதுல வயசுக்குத் தகுந்தோ, வருமானத்துக்குத் தகுந்தோ எந்த அளவும் கிடையாது. ஏன்னா, நோய் ஏழைக்கு வந்தாலும் பணக்காரனுக்கு வந்தாலும் ஒரே செலவுதான். சின்னப் பையனுக்கு வந்தாலும் வயசாளிக்கு வந்தாலும் செலவு ஒண்ணுதான். அதனால, உங்களுக்கு எவ்வளவு பிரீமியம் கட்ட சக்தியிருக்கோ, அவ்வளவுக்கு பாலிசி எடுத்துக்கலாம். அதேமாதிரி உங்களுக்கு என்ன மாதிரியான மருத்துவச் செலவுக்குப் பணம் தேவைப்படும்னு நினைக்கிறீங்களோ... அதுக்கு ஏத்த மாதிரியும் பாலிசி எடுத்துக்கலாம்.

பொதுவா, ‘ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி’ங்கறது ஆண்டுதோறும் புதுப்பிக்கற மாதிரியான திட்டம். சில நிறுவனங்கள் அதிலே விதிவிலக்கு வெச்சிருக்காங்க. அதனால, பாலிசி எடுக்கறவருக்கு ஏற்படுற மருத்துவச் செலவுகளை, பாலிசி நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்குறதுதான் இந்தத் திட்டம். ஒருவேளை, பாலிசி எடுத்தவருக்கு ஒரே வருஷத்தில் ரெண்டாவது தடவை மருத்துவச் செலவு ஏற்பட்டுட்டா... அதை க்ளைம் பண்ண முடியாதானு கேள்வி வரும்.

பண்ணலாம். முதல்தடவை கிளைம் பண்ணின தொகை போக, அவருடைய பாலிசித் தொகையில் மிச்சமிருந்தால் அந்தத் தொகைக்கு எத்தனை தடவை வேணாலும் கிளைம் பண்ணிக்கலாம்.

(நாணயம் விகடன் எல்.கே.ஜி. இணைப்பு புத்தகத்திலிருந்து)
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ