Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதிய திருப்பம்...... சுவிஸ் கணக்குகள்

புதிய திருப்பம்...... சுவிஸ் கணக்குகள் 

விசாரணை ஊடகவியலாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு பல நாடுகளில், பல வருடங்கள் விசாரனையை  நடத்திய பின், தற்போது ஆயிரக்கணக்கான, சுவிஸ் நாட்டில் உள்ள கறுப்புப் பண வங்கிக் கணக்குகளை கண்டுபிடித்திருக்கிறது. ஏற்கனவே உச்ச நீதி மன்றத்தின் உத்தரவின் பெயரில் இயங்கிக் கொண்டிருக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 628 இந்தியர்களையும் விசாரித்து வருகிறது. 

 

இந்த பட்டியலில் தோராயமாக 1,195 பேர் இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தம் 276 இந்தியர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.அவர்களின் கணக்கில் ஒரு மில்லியன் டாலருக்கும் அதிகமாக பணம் இருப்பவர்கள் தான் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றனர்.
2008ல் ஹெச் எஸ் பி சி யிடமிருந்து திருடப்பட்டு இந்த பட்டியல், பின்பு ஃப்ரான்ஸ் நாட்டு அதிகாரிகளுக்கும், பின்பு ஃபரான்ஸ் நாட்டு அதிகாரிகள் மூலம் இந்திய அரசாங்கத்திற்கு 2011ல் வழங்கப்பட்டது. அவர்கள் வழங்கிய பட்டியலில் பாதிக்கு மேற்பட்டவர்களின் பெயர் ஏற்கனவே இந்திய அரசாங்கத்திடம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவும், வருமானவரித்துறையினரும் விசாரனை நடத்தி வருகின்றனர்.
 
உலகில் உள்ள மொத்த கறுப்பு பணத்தின் அளவு தோராயமாக 102 பில்லியன் டாலர். அதில் நான்கு சதவிகிதம் இந்தியாவின் கறுப்புப் பணம் என்பதும் கவனிக்கத்தக்கது.
 
சுவிஸ் வங்கியில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களின் பட்டியல் :,
 
ப்ரனீத் கவுர் - ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முன்னாள் அமைச்சர், 
அன்னு டான்டன் - முன்னாள் காங்கிரஸ் எம்.பி
காந்தி குடும்பத்தினரின் விசுவாசிகளான வஸந்த் சதே, நாராயண ரானே மற்றும் அவர்களின் குடும்பம்.
சிவசேனா கட்சியிலிருந்து ஸ்மிதா தாக்கரே (பால் தாக்கரேயின் மருமகள்)
 
இந்தியாவின் பெரிய வியாபார புள்ளிகளான
அம்பானி சகோதரர்கள், பிர்லா குழுமத்தில் ஒரு பகுதியான யாஸ், டாபரின் பர்மன்ஸ், ஷாவாலேஸின் சப்ரியாஸ், டால்மியா குழுமத்தில் சில குடும்பங்கள், ஜெட் ஏர்வேஸின் நரேஷ் கோயல், எம்மார் எம்.ஜி.எஃப்ன் ஸ்ரவன் குப்தா, எஸ்கார்ட்ஸின் நந்தாஸ், முன்னாள் குஜராத் அம்புஜாஸ் தி நியோடியாஸ், , இந்தியாவில் பிறந்து இங்கிலாந்து குடுமகனாக இருக்கும் ஸ்வரஜ் பால், ராஹெஜா சகோதரர்கள், சல்கோகர் மற்றும் பல வைர வியாபாரிகள்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ