Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

699 ரூபாய்க்கு செல்போன் : மைக்ரோமேக்ஸ் அறிமுகம்

ஸ்மார்ட்போன்களுக்கு வாடிக்கையாளர்கள் மாறி வந்தாலும், ஒரு சாதாரண அடிப்படை மாடல் செல்போனை அதற்கு மாற்றாக வைத்துள்ளனர். இதற்காகவே ஒரு போனை தயாரித்துள்ளது இந்திய செல்போன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ்.
 
மைக்ரோமேக்ஸ் தற்போது ஜாய் எக்ஸ்-1800 மற்றும் ஜாய் எக்ஸ் -1850 ஆகிய இரண்டு செல்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜாய் எக்ஸ் -1800 செல்போனில்  1.76 இன்ச் திரை அளவும், 0.08 MP  கேமரா வசதியும், 4 ஜிபி மெமரியும் கொண்டதாக இருக்கும் என்று கூறியுள்ளது மேலும் இதில் ரேடியோ வசதியும் இருக்கும் என்று மைக்ரோமேக்ஸ் தெரிவித்துள்ளது. 
 
இதே வசதிகளுடன் பேட்டரி திறன் மட்டும் சற்று அதிகமாக உள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ள போன் தான் ஜாய் எக்ஸ் - 1850 இதன் விலையை 749 ரூபாயாக மைக்ரோமேக்ஸ் நிர்ணயித்துள்ளது.
 
அதுமட்டுமின்றி இது புதுமையானதாகவும், வாடிக்கையாளர்கள் விரும்பும் விதத்தில் விலை குறைவாகவும் இருக்குமாறு இதனை வடிவமைத்துள்ளதாக மைக்ரோமேக்ஸ் தெரிவித்துள்ளது. இதில் 1800 மாடல் செல்போன் தற்போது ரீட்டெயில் சோரூம்களில் கிடைக்கிறது. மற்ற மாடல் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளதாக மைக்ரோமேக்ஸ் கூறியுள்ளது.
 
குறைந்த விலைக்கு தரும் இந்த செல்போன்கிஅளின் வாழ்நாள் குறித்த விவரம் தெரியவில்லை. மேலும் இந்த ரக போன்களுக்கு ரிப்பெயர் செய்யும் கட்டணமும் இந்த செல்போன்களின் கட்டணமும் கிட்டத்தட்ட ஒன்று என்கிறனர் கேட்ஜெட் பயன்பாட்டாளர்கள். இருப்பினும் 699 ரூபாய்க்கு மாற்று செல்போனாக பயன்படுத்தலாம் என்கின்றனர் சிலர்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ