Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகக் கோப்பை கிரிக்கெட் சிக்ஸர் அடிக்கும் ட்விட்டர்!

தற்போது உலகத்தில் தொடங்கி உள்ளூர் வரை இன்றைய ட்ரெண்ட் என்ன என தெரிந்து கொள்ள உதவும் சமூக வலைதளமாக மாறிவிட்டது ட்விட்டர். ஆன்லைன் மார்க்கெட்டிங்கிற்கு வழிவகுக்கும் ட்விட்டர் நிறுவனத்தை தான் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியமும் நைக்கி நிறுவனமும் அணுகியுள்ளது. 
 
இந்திய அணியின் சீருடையை ஸ்டார் ஸ்போர்ட்ஸுடன் இணைந்து விற்க முடிவு செய்துள்ளது. உலககோப்பையின் போது ட்விட்டரில் #OwnTheJersey என்ற ஹாஷ்டேக்கை பயன்படுத்தி ஆண்லைன் மூலம் விளம்பர வருவாயை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. 
 
இதனால் ட்விட்டரின் வருவாயும் கணிசமாக அதிகரிக்கும் என்றும், ஏற்கெனவே இந்தியாவில்  பாராளுமன்ற தேர்தலின் போது 60 மில்லியன் ட்விட் செய்யப்பட்டு வருவாய் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. 
 
ஏற்கெனவே இந்திய அணியின் உலகக் கோப்பை மந்திரமாக #Wewon'tGiveitBack என்ற ஹாஷ்டேக்கும் பிரபலமாகி வருகிறது. இன்று இந்தியா பயிற்சி ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இந்த ஹாஷ்டேக்கை ரசிகட்கள் ட்விட் செய்ய துவங்கியுள்ளனர். 
 
உலகக்கோப்பையை இந்தியா வெல்லுமா? இல்லையா? என்பது ஒருபுறம் இருந்தாலும் இந்த ஹாஷ்டேக் உத்தில் அதிக வருவாய் ஈட்ட வழிகுக்கும் என்கிறனர் இணையவாசிகள்.. 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP