Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் இந்திய சந்தைகள் : 10 மணி நிலவரம்

 ஏற்றத்தில் இந்திய சந்தைகள்

 
 இன்றைய நாளின் துவக்கத்தில் பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. காலை 10 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 106 புள்ளிகள் அதிகரித்து 28462 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 35 புள்ளிகள் அதிகரித்து 8601 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
இன்றைய வர்த்த்கத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 88 ரூபாய் குறைந்து 26,856 ரூபாய்க்கும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 141 ரூபாய் குறைந்து  3,167 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  62.23 ரூபாயாக உள்ளது. 
 
பட்ஜெட் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருவதால் சந்தையில் ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது என்றும்,  அரசின் திட்டங்கள் குறித்த விளக்கம் பட்ஜெட்டில் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால் திட்டங்கள் தொடர்பான துறைகளின் பங்குகள் ஏற்றத்தில் காணப்படும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இன்றைய வர்த்தகத்தில் ஆசிய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. அமெரிக்க மற்றும்  ஐரோப்பிய சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன.
 
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 743 பங்குகள் விலை அதிகரித்தும், 198 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமானது.
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
எல்&டி 1.98
பேங்க் ஆஃப் பரோடா 1.70
பவர் க்ரிட் கார்ப் 1.59
ஆக்சிஸ் வங்கி 1.58
ஐசிஐசிஐ வங்கி 1.56 
விலை குறைந்த பங்குகள்:
 
கெய்ர்ன் இந்தியா -1.75
செஸா ஸ்டெர்லைட் -1.67
ஓஎன்ஜிசி -1.33
சிப்லா -1.26
டாடா மோட்டார்ஸ் -1.08
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ