Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதலீட்டு கண்காட்சி - கருத்தரங்கம் 2015 பிப்.14 தொடக்கம்

டீம் அண்ட் டிரேட் எக்ஸ்போஸ்,

நாணயம் விகடன்: முதலீட்டு கண்காட்சி கருத்தரங்கம் 2015 

சென்னையை சேர்ந்த டீம் அண்ட் டிரேட் எக்ஸ்போஸ்( TEAM and Trade Expos) நிறுவனம், நாணயம் விகடன் உடன் இணைந்து முதலீட்டு கண்காட்சி 2015 (INVEST XPO'15) என்கிற கண்காட்சி மற்றும் கருத்தரங்கை நடத்துகிறது. 

இது குறித்து டீம் அண்ட் டிரேட் எக்ஸ்போஸ் நிறுவனத்தின் சிஇஓ ஜெய் கோபாலன், இயக்குநர் வெ.ராமு நிருபர்களிடம் கூறியதாவது, '' இந்த முதலீட்டு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் சென்னை டிரேட் சென்டரில் பிப்ரவரி 14 மற்றும் 15 ம் தேதி நடக்கிறது. இதில் ஆர்பிஐ, செபி போன்ற கட்டுபாட்டு அமைப்புகள், சிடிஎஸ்எஸ்ஐஎல், எம்சிஎக்ஸ் போன்ற நிறுவனங்கள் பங்கேற்கிறார்கள். மேலும், இரு தினங்களும் பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட், கமாடிட்டி, நிதி ஆலோசனை, கரன்சி டிரேடிங் குறித்த நிபுணர்களின் கருத்தரங்கம் நடக்கிறது. கண்காட்சியை பார்வை இட கட்டணம் கிடையாது. கருத்தரங்கில் கலந்து கொள்ள கட்டணம் இருக்கிறது. அனைத்து கருத்தரங்கிலும் பங்கேற்கும் முதலீட்டாளர்களுக்கு சலுகை உண்டு" என்றார்.
 
 
இந்த கண்காட்சி மற்றும் கருத்திரங்கின் பிரதான ஸ்பான்சராக  இன்டகிரேடட் என்டர்பிரைசஸ் (இந்தியா) நிறுவனத்தின் துணை தலைவர் எஸ். செல்வகுமார், ஏன் இது போன்ற முதலீட்டு கருத்தரங்கள் மற்றும் கண்காட்சிகள் தேவை என்பதை விளக்கி பேசினார். 
 
 
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ