Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃப்ளிப்கார்ட்: அடுத்த மூன்று ஆண்டுக்குள் $8 பில்லியன் இலக்கு!

ஃப்ளிப்கார்ட்: அடுத்த மூன்று ஆண்டுக்குள் $8 பில்லியன் இலக்கு!

ஆன்லைன் ரீடெய்ல் நிறுவனங்களில் மிகப் பெரிய நிறுவனமான ஃப்ளிப்கார்ட், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் எட்டு பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை விற்க வேண்டும் என்று இலக்கை நிர்ணயித்திருக்கிறது. நேற்று நடைபெற்ற ஃப்ளிப்கார்ட் பணியாளர்கள் சந்திப்பின் போது, ஃப்ளிப்கார்ட் நிறுவனர்களான சச்சின் பன்சால் மற்றும் பென்னி பன்சால் ஆகிய இருவரும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மொத்த விற்பனைப் பொருட்கள் மதிப்பு எட்டு பில்லியன் டாலராக இருக்க வேண்டும் என்று  தெரிவித்திருக்கிறார்கள்.

இன்றைய நிலையில் இந்த நிறுவனத்தின் மொத்த விற்பனை பொருட்கள் மதிப்பு நான்கு பில்லியன் டாலராகவும், அது போல முக்கிய ஆன்லைன் ரீடெய்ல் நிறுவனங்களான ஸ்நேப்டீல் மற்றும் அமேஸான் நிறுவனங்களின் மொத்த விற்பனை பொருட்கள் மதிப்பானது மூன்று பில்லியன் டாலர்கள் மற்றும் ஒரு பில்லியன் டாலர்கள் என்கிற அளவில் இருப்பதாகவும் ஆன்லைன் ரீடெய்ல் வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ