Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கத்தை அதிகம் பயன்படுத்தும் நாடு: இந்தியா முதலிடம்!

தங்கத்தை அதிகம் பயன்படுத்தும் நாடு: இந்தியா முதலிடம்!

தங்கத்தை அதிகமாக பயன்படுத்தும் நாட்டின் தரவரிசைப் பட்டியலில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா மீண்டும் முதல் இடத்தை பிடித்திருப்பதாக உலக தங்க கவுன்சில் (World Gold Council (WGC)) தெரிவித்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவின் தங்க நுகர்வானது 842.70 டன் எனவும்,  இதே காலகட்டதில் சீனாவின் தங்க நுகர்வானது 813.60 டன்னாக இருந்தது எனவும் அதன் ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டில் இவ்விரு நாடுகளிலும் தங்கத்தின் தேவையானது குறைந்து காணப்பட்டாலும், இந்தியாவின் 19 சதவிகிதத்தை விட, சீனாவில் தங்கத்தின் தேவை குறைவு 38 சதவிகிதமாக காணப்பட்டதால், இந்தியாவுக்கு முதல் இடம் கிடைத்திருக்கிறது. அனைத்து நாடுகளின் தங்க தேவையை கணக்கிடும் போது இந்தியா மற்றும் சீனாவின் தங்கத் தேவை மொத்த தங்கத் தேவையில் பாதியாக காணப்படுகிறது.  நடப்பு 2015-ம் ஆண்டில் இந்தியா மற்றும் சீனாவின் தங்க தேவையானது 900-1,000 டன்னாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளதாகவும் இத்துறை சார்ந்த வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இந்தியா மற்றும் சீனாவின் தங்க தேவை குறித்து, "இவ்விரு நாடுகளிலும், தங்கத்தின் தேவையை சம அளவிலேயே வைத்திருக்கு எண்ணுகிறோம். ஆனால் சீனாவை விட இந்தியாவில் தங்க தேவையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் இந்தியாவில் திருமணம் மற்றும் திருவிழா காலங்களில் தங்கத்தின் தேவையானது அதிகரித்து காணப்படுவதுதான்" என்று WGC--ன் மேலாண்மை இயக்குனர் சோமசுந்தரம் தெரிவித்திருக்கிறார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP