Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் இந்திய சந்தைகள் : 10 மணி நிலவரம்

 ஏற்றத்தில் இந்திய சந்தைகள்

 
 இன்றைய நாளின் துவக்கத்தில் பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. காலை 10 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 193 புள்ளிகள் அதிகரித்து 29288 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 52 புள்ளிகள் அதிகரித்து 8857 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
இன்றைய வர்த்த்கத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 64 ரூபாய் அதிகரித்து 26,755 ரூபாய்க்கும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 18 ரூபாய் குறைந்து  3,276 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  62.12 ரூபாயாக உள்ளது. 
 
அமெரிக்க  மற்றும் ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்தில் காணப்பட்டன. ஜப்பான் பொருளாதாரம் நான்காவது காலாண்டில் வீழ்ச்சியில் இருந்து மீண்டாலும் எதிர்பார்த்த ஏற்றம் இல்லாமல் வந்துள்ளது. ஆசிய சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமாகிறது.
 
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ளில் 1144 பங்குகள் விலை அதிகரித்தும், 739 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின. 
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
 பிபிசிஎல்                          3.32
பாரதி ஏர்டெல்                  2.76
டாடா மோட்டார்ஸ்  2.35
ஹச்யூஎல்                       2.26
டாடா ஸ்டீல்                 1.90
 
 
விலை குறைந்த பங்குகள்:
 
சன் பார்மா                     -2.12
லூபின்                         -0.94
பிஹச் இஎல்                 -0.77
எல்&டி                         -0.76
ஜின்டால் ஸ்டீல்      -0.76
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ