Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதலீட்டு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்: சென்னையில் முதலீட்டாளர்கள் குவிந்தனர்...!

 முதலீட்டு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்: சென்னையில் முதலீட்டாளர்கள் குவிந்தனர்...!

 
சென்னையை சேர்ந்த டீம் அண்ட் டிரேட் எக்ஸ்போஸ் (TEAM and Trade Expos) நிறுவனம், நாணயம் விகடன் உடன் இணைந்து முதலீட்டு கண்காட்சி 2015 (INVEST XPO'15) என்கிற கண்காட்சி மற்றும் கருத்தரங்கை அண்மையில் சென்னையில் நடத்தியது. 
 
இந்தக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை ரிசர்வ் வங்கி, சென்னையின் தலைமை பொது மேலாளர் ஹரிகிரிஷ்ணன் மற்றும் செபியின் மண்டல இயக்குனர் சுரேஷ் பி மேனன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
 
 
டீம் அண்ட் டிரேட்
 
 
 
எக்ஸ்போஸ் நிறுவனத்தின் சிஇஓ ஜெய் கோபாலன், இயக்குநர் வெ.ராமு ஆகியோர் கண்காட்சி குறித்து விளக்கி பேசினர். 
 
இந்த முதலீட்டு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் சென்னை டிரேட் சென்டரில் பிப்ரவரி 14 மற்றும் 15 ம் தேதி நடந்தது.  ரிசர்வ் வங்கி, செபி போன்ற கட்டுபாட்டு அமைப்புகள், பிஎஸ் இ, சிடிஎஸ்எஸ்ஐஎல், என்எஸ்டிஎல், எம்சிஎக்ஸ் போன்ற நிறுவனங்கள்  அரங்கு அமைத்திருந்தார்கள். 
 
இரு தினங்களும் பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட், கமாடிட்டி, நிதி ஆலோசனை, கரன்சி டிரேடிங் குறித்த நிபுணர்களின் கருத்தரங்கம் நடந்தது. 
 
 இந்தக் கண்காட்சி மற்றும் கருத்திரங்கின் பிரதான ஸ்பான்சராக  இன்டகிரேடட் என்டர்பிரைசஸ் (இந்தியா) நிறுவனம் இருந்தது. புதிய தலைமுறை தொலைக்காட்சி டிவி பார்ட்னராக இருந்தது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP