Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் இந்திய சந்தைகள்

  ஏற்றத்தில் இந்திய சந்தைகள்

 
 இன்றைய நாளின் துவக்கத்தில் பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. காலை 9:45 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 78 புள்ளிகள் அதிகரித்து 29214 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 20 புள்ளிகள் அதிகரித்து 8829 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
இன்றைய வர்த்த்கத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 485 ரூபாய் குறைந்து 26,219 ரூபாய்க்கும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 40 ரூபாய் குறைந்து  3,247 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  62.22 ரூபாயாக உள்ளது. 
 
கிரீஸ் ஐரோப்பாவிடம் கடன் ஒப்பந்தத்துக்கான காலக்கெடுவை நீட்டிக்கும் என்ற கோரிக்கையை இன்று முன் வைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சிங்கப்பூர் மலேசிய பங்குச் சந்தைகள் இன்று சீன புத்தாண்டு காரணமாக அரை நாள் மட்டுமே இயங்கும், தைவான் மற்றும் தென் கொரிய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை என்றும் கூறப்படுகிறது.
 
ஆசிய சந்தைகள் மற்றும் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்துடனேயே வர்த்தகமாகின்றன. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ளில் 771 பங்குகள் விலை அதிகரித்தும், 226 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின. 
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
 ஐடிசி                 2.28
ஹச்டிஎஃப்சி 1.94
எம்&எம்         1.69
பிஎன்பி 1.62
எல்&டி         1.32
 
 விலை குறைந்த பங்குகள்:
 
ஹீரோ மோட்டோகார்ப் -3.93
என்எம்டிசி                              -3.32
பாரதி ஏர்டெல்                 -2.05
செஸா ஸ்டெர்லைட்         -2.01
டாடா மோட்டார்ஸ்         -1.75
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ