Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓய்வுக்காலத்துக்கு ரிலையன்ஸ் ரிட்டையர்மென்ட் ஃபண்ட்

 ஓய்வுக்காலத்துக்கு ரிலையன்ஸ் ரிட்டையர்மென்ட் ஃபண்ட்
- சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட்
 
சமீபத்தில் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ரிலையன்ஸ் ரிட்டையர்மென்ட் ஃபண்ட் என்ற திட்டத்தைச் சந்தைக்கு என்எஃப்ஓ (NFO) மூலமாகக் கொண்டு வந்தது. இந்த ஃபண்ட் என்எஃப்ஓ முடிந்து ரெகுலராக வாங்குவதற்கு பிப்ரவரி 13-ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த ஃபண்டில் செய்யும் முதலீட்டுக்கு 80C பிரிவின்கீழ் ரூ.1.50 லட்சம் வரைக்கும் வருமான வரிச் சலுகை கிடைக்கும். சந்தையில் ஏற்கெனவே 80C-ன் கீழ் இரண்டு திட்டங்கள் இருந்தாலும், அவை பெரும்பாலும் கடன் சார்ந்தவையாகும். இந்தத் திட்டம் 2 ஆப்ஷன்களைத் தந்துள்ளது.
 
1. பங்கு சார்ந்தது (வெல்த் கிரியேஷன்)
 
2. கடன் சார்ந்தது (இன்கம் ஜெனரேஷன்)
 
இந்த 2 ஆப்ஷன்களுக்கும் இடையில் அளவில்லாத ஸ்விட்ச் செய்துகொள்ளலாம். குறிப்பிட்ட வயதில் ஆட்டோமேட்டிக்காக மாறும் வசதியும் உள்ளது. அதேபோல், ஒருவர் தமது 60-வது வயதிலிருந்து பென்ஷன் போல, மாதாமாதம் பணத்தை எடுத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.
 
இந்த ஃபண்டுக்கு 5 வருட லாக்-இன் உள்ளது. மேலும் 60 வயதுக்குள் போட்ட தொகையைத் திரும்ப எடுத்தால் 1% வெளியேறும் கட்டணம் உள்ளது. ஓய்வுக்காலத்துக்காகப் போட்ட முதலீட்டை நினைத்தபோதெல்லாம் எடுக்க முடியாத சூழ்நிலை வேண்டும். மற்றும் அந்த முதலீட்டுக்கு வருமான வரி சலுகையும் வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த ஃபண்ட் ஒரு நல்ல ஃபண்டாக அமையும்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ