Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் இந்திய சந்தைகள்

 இறக்கத்தில் இந்திய சந்தைகள்

 
இன்று மதியம் 11:45 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 80 புள்ளிகள் சரிந்து 29239 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 38 புள்ளிகள் சரிந்து 8830 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
இன்றைய வர்த்த்கத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 264 ரூபாய் அதிகரித்து 26,401 ரூபாய்க்கும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 98 ரூபாய் குறைந்து  3,215 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  62.34 ரூபாயாக உள்ளது. 
 
காலை சந்தை துவங்கியவுடன் இந்திய சந்தைகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றத்தில் காணப்பட்டது. நிஃப்டி 8900 புள்ளிகளை நெருங்கி வர்த்தகமானது. அதன் பின்  சந்தைகள் இரண்டும் இறக்கத்தில் வர்த்தகமாக துவங்கியுள்ளன. ஆர்பிஐ தங்க நாணயத்தின் மீதான இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தளர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
சீனப்புத்தாண்டை முன்னிட்டு சீனா, ஹாங்காங், சிங்கப்பூர் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ளில் 1121 பங்குகள் விலை அதிகரித்தும், 1050 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின. 
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
பிபிசிஎல் 1.69
டாடா ஸ்டீல் 1.48
ஏசியன் பெயிண்ட்ஸ் 1.18
இன்ஃபோசிஸ் 1.13
மாருதி சுசுகி 0.98
 
 விலை குறைந்த பங்குகள்:
 
பேங்க் ஆஃப் பரோடா -2.84
டாடா பவர் -2.26
கெய்ர்ன் இந்தியா -2.13
ஐசிஐசிஐ பேங்க் -2.04
என்டிபிசி -1.88
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ