Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மும்பையில் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்புணர்வு கூட்டம்!

 மும்பையில் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்புணர்வு கூட்டம்!

 
நாணயம் விகடன் மற்றும் பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வுக் கூட்டம் மும்பையில் வரும் ஞாயிற்றுக்கிழமை 22.02.2015 அன்று காலை 10 மணிக்கு  நடைபெற உள்ளது.
 
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாசகர்கள் கலந்துகொண்டு பயன்பெற்ற இந்தக் கூட்டம் தற்போது மும்பையில் முதல்முறையாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மியூச்சுவல் ஃபண்ட் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
 
இந்த நிகழ்ச்சியில் பங்குச் சந்தை நிபுணர் வி.நாகப்பன், பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சிஇஓ பாலசுப்பிரமணியன். முதலீட்டார் விழிப்புணர்வு மற்றும் விநியோகப் பிரிவு தலைவர் கே.எஸ்.ராவ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.
 
இந்த விழிப்பு உணர்வுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அனுமதி இலவசம். மும்பையில் வசிக்கும் வாசகர்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாமே!  
 
நிகழ்ச்சி நடைபெறும் இடம்:
 
ஸ்ரீ சண்முகானந்த ஃபைன் ஆர்ட்ஸ்
எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆடிட்டோரியம்
2வது தளம்,பிளாட் H, நார்த் இந்தியன் அசோஷியேஷன் அருகில்
பவ்தாஜி சாலை விரிவு, சயான் மேற்கு
மும்பை - 400022
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ