Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிரெடாய் ஃபேர்ப்ரோ 2015 ரியல் எஸ்டேட் கண்காட்சி

கிரெடாய் ஃபேர்ப்ரோ 2015 ரியல் எஸ்டேட் கண்காட்சி 
 
சென்னை வர்த்தக மையத்தில் (நந்தம்பாக்கம்) 3 நாள் நிகழ்வாக 2015 பிப்ரவரி 20-லிருந்து 22-ம் தேதிவரை ஃபேர்ப்ரோ 2015 நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியின்போது, கலந்துகொண்ட பிரபல திரைப்பட நடிகை சுஹாசினி மணிரத்தினம், சென்னை வாழ் மக்களுக்கு சிறந்த விலையில் தரமான ரியல் எஸ்டேட் சொத்துகளை கொண்டுவருவதற்காக இந்தக் கண்காட்சி அமையும் என்றார்.
 
சென்னையைச் சேர்ந்த சுமார் 85 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், அவர்களது புதிய மற்றும் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிற குடியிருப்பு திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.
 
இந்தக் கண்காட்சியில் சுமார் 300 அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. 
 
கிரெடாய் சென்னையின் தலைவர் அஜித் குமார் சோர்டியா, 'இதற்கு முன்பு நடைபெற்ற அனைத்து பதிப்புகளையும்விட ஃபேர்ப்ரோ 2015 இல் செய்யப்படும் ஒவ்வொரு புக்கிங்கிற்கும் 2 ஆண்டுகளுக்கு வீட்டு கடன் மீது 2% வட்டி தள்ளுபடியை வழங்கப்படுகிறது. ” என்றார். 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ