Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்

 
 இன்றைய நாளின் வர்த்தக முடிவில் இந்திய சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 142 புள்ளிகள் அதிகரித்து 29462 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 26 புள்ளிகள் அதிகரித்து 8895 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
இன்றைய வர்த்த்கத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 285 ரூபாய் அதிகரித்து 26,422 ரூபாய்க்கும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 116 ரூபாய் குறைந்து  3,197 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  62.34 ரூபாயாக உள்ளது. 
 
இந்த ஏற்றம் பட்ஜெட்டுக்கு முந்தைய எதிர்பார்ப்புகளால் அமைந்துள்ளது என்றும், ஆனால் பட்ஜெட் எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் தந்தால் இந்த ஏற்ரம் இறக்கத்தை சந்திக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
 
விலை அதிகரித்த பங்குகள்:
ஜின்டால் ஸ்டீல் 25.75
செஸா ஸ்டெர்லைட் 6.75
ஹிண்டால்கோ 3.03
டாடா பவர் 2.38 
எல்&டி 2.12
 
  விலை குறைந்த பங்குகள்:
 பேங்க் ஆஃப் பரோடா -2.54
ஏசிசி -2.31
டெக் மஹிந்தரா -2.15
கிராஸிம் -2.10
அம்புஜா சிமெண்ட்ஸ் -1.87
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ