Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி

 இன்றைய நாளின் துவக்கத்தில் பங்குச் சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின. காலை 9:45 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 260 புள்ளிகள் சரிந்து 29202 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 71 புள்ளிகள் சரிந்து  8824 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
இன்றைய வர்த்த்கத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 129 ரூபாய் அதிகரித்து 26,266 ரூபாய்க்கும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 67 ரூபாய் குறைந்து  3,246 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  62.25 ரூபாயாக உள்ளது. 
 
எஃப்ஐஐ முதலீடுகள் குறைந்து வருவதும். ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவும் இந்திய சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. பட்ஜெட்டுக்கு முந்தைய ஏற்ற இறக்கங்கள் சந்தையில் தொடர்ந்து காணப்படுகின்றன. பட்ஜெட் அறிவிப்புகளை பொருத்தே சந்தையில் நிலை தன்மை நிலவும் என்று கூறப்படுகிறது. 
 இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ளில் 574 பங்குகள் விலை அதிகரித்தும், 302 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின. 
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
ஜின்டால் ஸ்டீல் 3.20
ஹிண்டால்கோ 2.40
டிஎல்எஃப் 2.06
பிஹச்இஎல் 1.60
டாடா ஸ்டீல் 1.45
 
 விலை குறைந்த பங்குகள்:
 ஐசிஐசிஐ வங்கி -2.66
ரிலையன்ஸ் -2.33
ஹச்டிஎஃப்சி -1.70
டாடா பவர் -1.59
ஆக்சிஸ் வங்கி -1.26
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ