Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் முடிந்த சென்செக்ஸ்; நிஃப்டி!

ஏற்றத்தில் முடிந்த சென்செக்ஸ்; நிஃப்டி!


இன்று ஏற்றத்தில் தொடங்கிய பங்குச் சந்தை, ஏற்றத்துடனேயே முடிந்திருக்கிறது. சந்தை முடிவில் மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 3.33 புள்ளிகள் உயர்ந்து 29007.99 என்கிற அளவில் முடிவடைந்திருக்கிறது. அது போல, தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியும், காலையிலிருந்து தொடர்ந்து ஏற்றத்துடன் வர்த்தகமாகி, முடியும்போதும் 5.15 புள்ளிகள் அதிகரித்து முடிந்திருக்கிறது. 4.50 மணி நிலவரப்படி 10 கிராம் தங்கத்தின் விலை 146 ரூபாய் உயர்ந்து 26,205 ரூபாய் என்கிற அளவிலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.01 ரூபாய் என்கிற அளவிலும் காணப்பட்டன.

சந்தையான ஏற்றத்தில் காணப்பட்டதால், பெரும்பாலான நிறுவனப் பங்குகளும் விலை உயர்ந்து வர்த்தகமாகின. டாப் 5 பங்குகளின் தரவரிசையில் ஏசிசி (உயர்வு 2.33%), ஹெச்டிஎஃப்சி (2.30%), இன்ஃபோசிஸ் (1.97%), பார்தி ஏர்டெல் (1.91%) மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் (1.82%) ஆகிய நிறுவனப் பங்குகள் இடம்பிடித்திருக்கின்றன. அதே போல விலை இறக்கப் பங்குகள் தரவரிசையில் டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரி (குறைவு -2.39%), டாடா ஸ்டீல் (-2.28%), சன் பார்மா (-2.16%), டாடா பவர் (-1.72%), ஹெச்டிஎஃப்சி பேங்க் (-1.42%) ஆகிய நிறுவனப் பங்குகள் இருக்கின்றன.

 

 
 இன்றைய நாளின் துவக்கத்தில் பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. காலை 9:45 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 224 புள்ளிகள் அதிகரித்து 29229 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி  66 புள்ளிகள் அதிகரித்து 8828 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
இன்றைய வர்த்த்கத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 94 ரூபாய் குறைந்து 26,059 ரூபாய்க்கும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 3,122 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  62.06 ரூபாயாக உள்ளது. 
 
டாலரின் மதிப்பில் காணப்படும் சரிவால் இந்திய சந்தைகளில் ஏற்றம் காணப்படுகிறது. ஆசிய சந்தைகள் மற்றும் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்துடனேயே வர்த்தகமாகின்றன. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ளில் 649 பங்குகள் விலை அதிகரித்தும், 146 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின. 
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
ஹச்டிஎஃப்சி 2.19
கெய்ர்ன் இந்தியா 1.85
செஸா ஸ்டெர்லைட் 1.75
பாரதி ஏர்டெல் 1.71
ரிலையன்ஸ் 1.64
 
 விலை குறைந்த பங்குகள்:
 
ஜி என்டர்டெயிண்மென்ட் -0.93
ஹச்யூஎல் -0.40
ஐடிசி -0.33
மாருதி சுசுகி -0.16
சன் பார்மா -0.06
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ