Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சரிவில் முடிந்த பங்குச் சந்தை!

சரிவில் முடிந்த பங்குச் சந்தை!

சரிவில் தொடங்கிய இன்றைய பங்குச் சந்தை, சரிவில் முடிந்திருக்கிறது. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 261.34 புள்ளிகள் குறைந்து 28746.65 என்கிற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 83.40 புள்ளிகள் சரிந்து 8683.85 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.இந்திய அரசானது 2015-16-ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. ரயில் துறை சார்ந்த பங்குகளில் சில ஏற்றத்தை கண்டிருந்தாலும், கலன்ந்தி  ரெயில் நிர்மன் மற்றும் டெக்ஸ்மாகோ ரெயில் நிறுவனத்தின் நிறுவனப் பங்குகள் 2.5% மற்றும் 4% வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன. அதே சமயம் சிமெண்ட் (2.7%), நிலக்கரி (6.3%) மற்றும் மெட்டல் (3.1%) துறை சார்ந்த பங்குகள் விலை அதிகரித்து காணப்பட்டன.

/

இன்றைய நாளின் துவக்கத்தில் பங்குச் சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின. காலை 10 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 90 புள்ளிகள் சரிந்து 28917 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 27 புள்ளிகள் சரிந்து  8739 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.

 
இன்றைய வர்த்த்கத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 64 ரூபாய் அதிகரித்து 26,123 ரூபாய்க்கும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 5 ரூபாய் குறைந்து  3,117 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  61.96 ரூபாயாக உள்ளது. 
 
இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பெரிய மாற்ரங்கள் எதுவும் இருக்காது என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் ரயில் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகின்றன. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சற்று அதிகரித்தாலும் ரயில்வே பட்ஜெட் அறிப்புகள் மீதான எதிர்பார்ப்புகள் சந்தையின் இறக்கத்திற்கு காரணமாகின்றன. 
 இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ளில் 371 பங்குகள் விலை அதிகரித்தும், 126 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின. 
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
செஸா ஸ்டெர்லைட் 1.78
ஜின்டால் ஸ்டீல் 1.45
அம்புஜா சிமெண்ட்ஸ் 0.90
பிஹச்இஎல் 0.89
ஓஎன்ஜிசி 0.84
 
 விலை குறைந்த பங்குகள்:
சன் பார்மா -1.94
பஜாஜ் ஆட்டோ -1.33
இன்ஃபோசிஸ் -1.20
பாங்க் ஆஃப் பரோடா -1.19
ஹின்டால்கோ -1.14
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ