Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்மார்ட்போன் விற்பனை முதல் முறையாக சரிவு!

ஸ்மார்ட்போன் விற்பனை முதல் முறையாக சரிவு!

2014-15-ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், அதாவது அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ஸ்மார்ட் போன் விற்பனை நான்கு சதவிகிதமாக குறைந்து சுமார் 2.25 கோடியாக உள்ளது. தற்போதைய நிலையில் ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சங் நிறுவனம் 22 சதவிகிதத்துடன் முதல் இடத்திலும், 18 சதவிகிதத்துடன் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இரண்டாவது இடத்திலும் இருந்து வருகின்றன.

கடந்த சில மாதங்களாக மோட்ரோலா மற்றும் ஸியோமி நிறுவனங்கள் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து, பெரும்பாலான மக்களிடம் ஸ்மார்ட்போன்களை கொண்டு சேர்த்தது குறிப்பிடத்தக்கது. ஸ்மார்ட்போன் விற்பனையில் சமீபத்தில் களம் இறங்கிய சீன நிறுவனமான ஸியோமி தற்போது ஸ்மார்ட்போன் விற்பனையில் நான்கு சதவிகித பங்களிப்புடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ