Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரயில்வே பட்ஜெட் 2015

 ரயில்வே பட்ஜெட்டை துவக்கினார் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு

 

இந்த பட்ஜெட் நான்கு இலக்குகளை மையமாகக் கொண்டது. 
 
இலக்கு 1: மேம்படுத்தப்பட்ட சேவைகள் மூலம் வாடிக்கையாளருக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவது
இலக்கு 2: பாதுகாப்பான பயணம்
இலக்கு 3: உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல்
இலக்கு 4: இந்திய ரயில்வேயை தன்னிறைவான நிதித் தன்மை உடைய துறையாக மாற்றுவது
 
* ரயில் கட்டணங்களில் ஏற்றமில்லை
 
*ரயில்களில் க்ளின் இந்தியா திட்டம் தொடரும். சுத்தமான ரயில்களும், ரயில் நிலையங்களும் வடிவமைக்கப்படும். அனைத்து ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் சுகாதாரம் மேம்படுத்தப்படும்
 
* 17,000 கழிப்பறைகள் பயோ கழிப்பறைகளாக மாற்றப்படும்.
 
*பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளுக்கு ஹெல்ப் லைன் எண் 182 அறிமுகப்படுத்தப்படும்.
 
* 24x7 சேவையாக 138 மார்ச் 1 முதல் செயல்படும்
 
* முன்பதிவில்லா டிக்கெட்கள் 5 நிமிடத்தில் ஸ்மார்ட்போன் மூலம் எடுத்துக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்படும்.
 
*ரயில்கள் மற்றும் பயணங்கள் குறித்த தகவல்கள் எஸ்.எம்.எஸ் மூலமாக அறிவிக்கப்படும் வசதி டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்படும்.
 
பெண்களுக்கான ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும்
 
சீனியர் சிட்டிசன்களுக்கும், மாற்றுதிறனாளிகளுக்கும் அதிநவீன வசதிகள் ஐஆர்சிடிசி மூலம் அளிக்கப்படும்.
 
என் ஐ எஃப் டி(NIFT) மற்றும் என் ஐடி(NID) மூலம் பயணிகளுக்கு நல்ல மற்றும் சுகாதாரமான படுக்கைகளும், ரயில்களின் உள்ளலங்காரங்களும் அமைக்கப்படும்.
 
தற்போதுள்ள அளவைவிட இரண்டு வருடங்களில் ரயில் பயணங்களின் நேரஅளவு 20 சதவிகிதம் குறைக்கப்படும்.
 
120 கோடி செலவில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படும்.
 
400 ரயில் நிலையங்கள் வை-ஃபை வசதியுடன் அமைக்கப்படும்.
 
வடகிழக்கு மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளுக்கு ரயில்பாதைகள் அமைக்கப்படும்.
 
டிரான்ஸ்லாக் எனும் பொதுத்துறை அமைப்பு மூலம் லாஜிஸ்டிக்ஸ் மேம்படுத்தப்படும்.
 
* டிக்கெட் முன்பதிவுக்கான கால அவகாசம் தற்போதுள்ள 60 நாட்களிலிருந்து   120 நாட்களாக நீட்டிப்பு.
 
* ஸ்மார்ட் போன்கள் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் டிக்கெட்டுகள்
 
* தானியங்கி இயந்திரங்கள் அதிகரிப்பு.
 
* ரயில் வரும் நேரம் குறித்து அறியும் எஸ்.எம்.எஸ்.வசதி
 
* 108 ரயில்களில்   இணையதளம் மூலம் உணவு பெரும் வசதி.
 
* கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் பொதுப்பெட்டிகள் இணைப்பு
 
* புல்லட் ரயில் அடுத்த 2 ஆண்டுகளில் அறிமுகம்.
 
  
 * நாட்டின் சமூக - பொருளாதார வளர்ச்சியில் ரயில்வே மிகப் பெரிய பங்காற்றுகிறது. ரயில்வே துறையில் செய்யப்படும் முதலீடுகள் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும்.
 
 *  ரயில் பாதை அகலமாக்கல் மின்மயமாக்கல் அதிகரிக்கப்படும்
 
*  ரயில்வே துறையில் கட்டுமானம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக கட்டுமானப் பணிகள் பல முடங்கிக் கிடக்கின்றன .
 
* ஏற்கெனவே உள்ள வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள்  இயக்கப்படும்.
 
* ராஜ்தானி சதாப்தி போன்ற விரைவு ரயில்கள்  அதிகம் தேவை.
 
* சரக்கு ரயில் போக்குவரத்தை அதிகரிக்க நடவடிக்கை.
 
1,200 கி.மீ.நீளத்திற்கு புதிய ரயில் பாதைகள்
 
* புதிய விளக்கு வசதிகளுடன் பெட்டிகளின் உள்கட்டமைப்பு மேம்படுத்தல்
 
* 9,400 கிலோ மீட்டர் தூரத்துக்கு மீட்டர் கேஜ் பாதை அகலப்பாதையாக மற்றப்படும்.
 
* 1,200 கி.மீ.நீளத்துக்கு புதிய ரயில் பாதைகள்.
 
* இரட்டைப் பாதை, மின்மயமாக்கல் உள்ளிட்ட 77 புதிய திட்டங்கள் அறிமுகம்.
 
* சரக்கு ரயில் போக்குவரத்துக்கு இரண்டு தனிப் பாதைகள்.
 
* ரயில் நிலையங்களை நவீனப்படுத்த தனியாருக்கு அனுமதி.
 
 
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ