Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவில் காபி ஏற்றுமதி 20% குறைவு!

2015-ம் ஆண்டில் இதுவரை காஃபி ஏற்றுமதியானது 20% குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு மிக முக்கிய உள்நாட்டுச் சந்தையில் காஃபி விலை அதிகரித்து காணப்படுவதும், சர்வதேச சந்தைகளில் காஃபி விலையானது குறைந்து காணப்படுவதுமே காரணமாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பருவநிலை மோசமாக உள்ள காரணத்தினால் அராபிகா ரக காஃபி உற்பத்தியானது குறைந்து காணப்படுகிறது. தற்போதைய நிலையில் அராபிகா காஃபி உற்பத்தி மேலும் குறையும் என்று காஃபி விவசாயிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதனால், அராபிகா காஃபி ஏற்றுமதியும் 50%-க்கு மேல் குறைந்து காணப்படுகிறது.

சர்வதேச சந்தையில் காஃபி விலை சரிவுக்கு மிக முக்கிய காரணம், காஃபி உற்பத்தியில் முதலிடத்திலுள்ள பிரேசிலில் காபி சப்ளை அதிகரித்திருப்பதுதான். இதனாலேயே சர்வதேச சந்தையில் 14% விலை குறைந்திருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close