Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பட்ஜெட் 2015-16: சிறப்பம்சங்கள்

இன்று அறிவிக்கப்படும் பட்ஜெட் மோடி அரசின் முழுமையான முதல் பட்ஜெட் என்பதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இன்று அதிகாலையிலிருந்தே பட்ஜெட் பரபரப்பானது மக்களிடம் தொற்றிக்கொள்ள, ரயில் மற்றும் பேருந்து பயணங்கள், டீ கடைகள் என எங்கு பார்த்தாலும் பட்ஜெட் பற்றியே அவர்கள் பேசி வருகிறார்கள்.

பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இன்று சனிக்கிழமையில் இந்திய நாட்டின் பட்ஜெட் கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. வழக்கமாக நிதி ஆண்டின் இறுதி நாள் அன்றோ அல்லது தொடங்க இருக்கும் நிதி ஆண்டின் முதல் நாள் அன்றோதான் பட்ஜெட் கூட்டமானது நடத்தப்பட்டு வந்தது.

அதாவது மார்ச் 31-ம் நாள் அல்லது ஏப்ரல் முதல் நாள். இந்த நாட்களும் இதுவரை வார நாட்களாகவே இருந்துள்ளன. ஆனால் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரானது சனிக்கிழமை தினமான இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. கடந்த 1999-ம் வருடம் யஷ்வந்த் சின்ஹா நிதி அமைச்சராக இருந்தபோது சனிக்கிழமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினத்தில் அவர் காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கலை ஆரம்பித்து மாலை 5 மணிக்கு முடித்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.

நம் அனைவரின் எதிர்பார்ப்பும் என்னவாகும் என்பதை சற்று பொருத்திருந்து பார்ப்போம்.

 

பட்ஜெட் அறிவிப்புகளை துவங்கினார் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி

 

1.பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா

2. வெளிப்படையான ஏலங்கள்

3. க்ளீன் இந்தியா திட்டம்

அரசின் மிகப்பெரிய மாற்றங்களுக்கான சீர்திருத்தங்களாக ஜிஎஸ்டி மற்றும் ஜன் தன், ஆதார் அடையாள அட்டை ஆகியவற்றை கூறலாம்.
 
அரசின் முக்கிய நோக்கம் பணவீக்கத்தை 6 சதவிகிதத்துக்கு கீழ் வைத்திருப்பது தான். அதுமட்டுமின்றி இரட்டை இலக்க வளர்ச்சியை சாத்தியப்படுத்துவது.
 
அனைத்து திட்டங்களும் ஏழைகளை மனதில் வைத்து உருவாக்கப்பட்டவை. இதன்படி 2020ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை ஏற்படுத்துவோம்.
 
மேக் இன் இந்தியா மூலம் உலகின் உற்பத்தி ஹப்பாக இந்தியாவை மாற்றுவோம்.. ஏர்கெனவே 50 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 6 கோடி கழிப்பறைகளை கட்டுவதை இலக்காக கொண்டு அரசு செயல்படவுள்ளது. 
 
* நாட்டிலுள்ள 20,000 கிராமங்களுக்கு மின் வசதி

* அனைத்து கிராமங்களுக்கும் தொலைத்தொடர்பு, மருத்துவ வசதி வழங்கப்படும்.

* 20,000 கிராமங்களுக்கு சூரிய மின்சார வசதி 
 
* விவசாயம் சார்ந்த தொழில்துறைக்கு முக்கியத்துவம்

* மூன்றில் இரண்டு பங்குபேர் 35 வயதுக்குள் உள்ளனர் அவர்களுக்கு வேலை மற்றும் தொழில் தொடங்க ஊக்குவிக்கப்படும்.

* நிதிப் பற்றாக்குறை 4.1 சதவிகிதமாக பராமரிக்க அரசு உறுதி

* வேளாண் வருமானத்தைப் பெருக்குவது சவாலாக உள்ளது

* ஆறு கோடி கழிவறைகள் அமைக்கப்படும்

* உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

* ஒரு லட்சம் கிலோமீட்டர் தூரத்துக்கு புதிய சாலைகள் அமைக்கப்படும்.

* 2020-க்குள் கிராமம் மற்றும் நகரங்களில் ஆறு கோடி வீடுகள் கட்டப்படும்.
 
* உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரம் இந்தியாவுடையது.
 

* நிதிப் பற்றாக்குறை அடுத்த மூன்று வருடங்களில் 3 சதவிகிதமாக அமைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2015-16ல் 3.9 சதவிகிதமாகவும், 2016-16ல் 3.5 சதவிகிதமாகவும், 2017-18ல் 3 சதவிகிதமாகவும் இந்த இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளது

 

* கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.25,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

* விவசாய கடன்களுக்கான இலக்கு 8.5 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

* 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் போன்ற திட்டங்கள் தொடரும். 

 
* மத்திய அரசின் இலக்குகள் 75-வது சுதந்திர தினத்துக்குள் எட்டப்படும்.

* பொது முதலீட்டை 1.25 லட்சம் கோடியாக அதிகரிக்க நடவடிக்கை

* ஊரக உள்கட்டமைப்புக்கு ரூ.25,000 கோடி ஒதுக்கீடு
 

* புதிய விபத்துக் காப்பீட்டுத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும்.

 

* கிராம கட்டமைப்பு வசதிக்கு ரூ.25,000 கோடி

 

* ஆண்டுக்கு 12 ரூபாய் பிரீமியத்தில் இரண்டு லட்சம் ரூபாய் விபத்துக் காப்பீடு

 

* அடல் பென்ஷன் திட்டம் உருவாக்கப்படும்

 

* இந்தியா வளர்ச்சி பெறும் என உலகமே எதிர்பார்க்கிறது.

 

* வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு 8.5 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்.

 

* தொழில்முனைவோருக்கு ஊக்கமளிக்கும் வகையில் திட்டங்கள்

 

* விவசாய கடன்களுக்காக நபார்டு வங்கிக்கு ரூ.25,000 கோடி

 

* பெண்கல்வி வேலைவாய்ப்பு விவசாய உற்பத்திக்கு முக்கியத்துவம்

 

* பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிட புதிய நடைமுறை உருவாக்கப்படும்

 

* கடன் வளர்ச்சி இலக்கு 8.5 லட்சம் கோடியாக உள்ளது

 

* தொழில்முனைவோரை ஊக்குவிக்க கடன்வசதிக்குப் புதிய திட்டம்

 

* நபார்டு வங்கி மூலம் சிறு குறு விவசாயிகளுக்கு ரூ.15,000 கோடி கடனுதவி

 

* மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்க மத்திய அரசு நடவடிக்கை

 

 சென்ற ஆண்டை விட ரூ.70,000 கோடி உள்கட்டமைப்பு முதலீடுகளை அதிகப்படுத்துவது.


 அசோக சக்கரத்துடன் கூடிய இந்திய தங்க நாணயங்கள் வெளியிடப்படும்

ஃபார்வர்டு மார்க்கெட் ஆணையம் செபியுடன் இணைக்கப்பட்டு வலுப்படுத்தப்படும்

நிர்பயா ஃபண்டுக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு

இபிஎஃப்-ல் பணியாளர்களின் பங்களிப்பு என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.

உலகின் ஐ.டி ஹப்பாக இந்தியாவை மாற்ற ரூ.150 கோடி செலவில் திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது

* ஏல முறை நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டால் மாநிலங்களுக்கு பல லட்சம் கோடி வருவாய்.

* உலகிலேயே சிறப்பான பங்குச் சந்தையில் இந்தியாவுக்கு 2-வது இடம்.

* சிறு விவசாயிகளுக்கு எளிதில் கடன் கிடைக்க நிதித் தொகுப்பு ஏற்படுத்தப்படும்.

* அனைத்து மக்களையும் முறையான நிதிச் சேவை நடைமுறைக்குள் கொண்டுவர திட்டம்.

 
* மத்திய அரசின் வரி வருவாயில் 62 சதவிகிதம் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும்.

* மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

* கிராமப்புற உள்கட்டமைப்பு வசதிகளுக்காக  ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

 
* கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அலகு அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும். 

* கூடங்குளம் அணுமின் நிலைய 2-வது உலையில் நடப்பு நிதியாண்டில் உற்பத்தித் தொடங்கப்படும்.

* நிதிச் சேவைகள் தொடர்பான குறைகளைத் தீர்க்க நிபுணர்கள் குழு அமைக்கப்படும்.

* தேசிய உள்கட்டமைப்பு நிதிக்கு வரும் நிதியாண்டில் ரூ.20 ஆயிரம் கோடி நிதி.

* கறுப்புப் பணம் பதுக்குவதைத் தடுக்க நேரடி பண பரிமாற்ற முறை படிப்படியாகக் குறைக்கப்படும். டெபிட் கார்டு பயன்பாடு ஊக்குவிக்கப்படும்

 

* தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான விதிமுறைகள் மாற்றியமைக்கப்படும்

 

* 150 நாடுகளுக்கு இந்தியா வந்தவுடன் விசா பெறும் சலுகை விரிவுபடுத்தப்படும்
சுற்றுலாத் துறையை விரிவுபடுத்த நடவடிக்கை

 

* சுற்றுலாத் தலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள்

 

* இளைஞர்களின் பணித்திறனை அதிகரிக்க தேசிய அளவில் இயக்கம்.

 

* காஷ்மீர், பஞ்சாப் தமிழகம் அசாமில் எய்ம்ஸ் மருத்துமனை கல்வி நிறுவனம் கொண்டுவரப்படும்

 

* கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தகுதியை மேம்படுத்த நடவடிக்கை

 

* கர்நாடகாவில் ஐஐடி நிறுவப்படும்

 

* டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் 2.50 லட்சம் கிராமங்களுக்கு இணையதள வசதி

 

* அமர்தசரஸில் முதுநிலை தோட்டக்கலை கல்லூரி

 

 தனிப்பட்ட நபர்களுக்கான வரிவிலக்கு தொடரும்!

ஜிஎஸ்டி அடுத்த ஆண்டு முதல் அமல்!

பாதுகாப்புத் துறைக்கு ரூ.2.46 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு!

கணக்கில் வராத வெளிநாட்டு பணத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும்!

கறுப்புப் பணத்தைக் கொண்டுவர புதிய சட்டம்!

பினாமி பரிவர்த்தனையைத் தடுக்க விரைவில் சட்டம்!
 
இந்த நிதியாண்டில் திட்டமிடப்பட்ட செலவுகள் ரூ.4.65 லட்சம் கோடியாகவும், திட்டமிடப்படாத செலவுகள் ரூ.13.12 லட்சம் கோடியாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

1 லட்சத்துக்கும் மேலான வங்கி பரிமாற்றங்களுக்கு பான் நம்பர் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

டெக்னிக்கல் சேவைகளுக்கான வரி 25 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
 
* வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யாவிட்டாலோ அல்லது வெளிநாட்டில் உள்ள சொத்து விவரங்களைத் தெரிவிக்காவிட்டாலோ 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும், 300 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும்.

22 பொருட்களுக்கான கலால் வரி குறைக்கப்படும்! சொத்து வரி ஒழிக்கப்படும்! 1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுகிறவர்களுக்கு 2% சர்சார்ஜ் விதிப்பு!

தோல் பொருட்களுக்கான எக்ஸைஸ் டியூட்டி 6 சதவிகிதமாக குறைப்பு!

ஜெனரல் எக்ஸைஸ் டியூட்டி 12.36 சதவிகிதத்திலிருந்து 12.05 சதவிகிதமாக குறைப்பு!
 
சிகரெட்டுக்கான எக்ஸைஸ் டியூட்டியில் மாற்றம் கொண்டு வரப்படும்!
க்ளீன் இந்தியா திட்டத்துக்காகச் செலவளிக்கப்படும் சிஎஸ்ஆர் சேவைக்கு 100 சதவிகித வரி விலக்கு அளிக்கப்படும்.
 
நடுத்தர மக்களுக்கான தேசிய பென்ஷன் திட்டத்துக்கான வரிவிலக்கு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.5 லட்சமாக அதிகரிப்பு

ஹெல்த் இன்ஷூரன்ஸ் வரிவிலக்கு 15,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக அதிகரிப்பு
சீனியர் சிட்டிசன்களுக்கு 30,000 ரூபாயாக அதிகரிப்பு


விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ