Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவில் இ-காமர்ஸ் நிறுவனங்களின் சேவை அடுத்த 5 ஆண்டுகளில் 50% அதிகரிக்கும்!

இந்தியாவில் இ-காமர்ஸ் சந்தை அடுத்த ஐந்து நிதியாண்டுகளில் (2016 - 2021) 50% அதிகரிக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பொருளாதார சர்வேயில் தெரிவித்திருக்கிறார். இணையம் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் 2014 அக்டோபர் மாத அறிக்கையின்படி இந்தியாவில் 27.8 கோடி (278 மில்லியன்) மக்களுக்கு மேல் இணையதளத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களுக்கு சரக்குகளை நிர்வகித்தல், போக்குவரத்து திட்டமிடல், போன்றவைகள் மிக முக்கிய பிரச்னைகளாக இருக்கின்றன. அதேபோல, நுகர்வோர் பிரச்னைகளும் இதில் குறிப்பிடும்படியாக இருக்கின்றன. இதற்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 போன்றவைகளில் திருத்த நடவடிகைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் பொருளாதார சர்வேயில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்திய அஞ்சல் சேவையை இதனோடு இணைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்திய அஞ்சலகங்களில் 89.76% அஞ்சலக அலுவலகங்கள் கிராமப்புறங்களில்தான் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆலோசனை நிறுவனமான பி.டபிள்.யு.சி.யின் கருத்துப்படி 2015-ம் ஆண்டில் 22 பில்லியன் டாலர் அளவுக்கு இ-காமர்ஸ் நிறுவனங்கள் மூலம் வணிகம் நடக்கும் என்று தெரியவந்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ