Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்

இறக்கத்தில் இந்திய சந்தைகள்...

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 291.32 புள்ளிகள் குறைந்து 28928.32 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 79.30 புள்ளிகள் குறைந்து 8765.30 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் தற்போது 0.95 சதவிகிதமாக இருக்கிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 183 ரூபாய் அதிகரித்து 26,410 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 23 ரூபாய் அதிகரித்து 3057 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து 61.83 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

தற்போதைய நிலவரப்படி மூலதன பொருட்கள், எஃப்எம்சிஜி, கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் போன்ற துறை சார்ந்த பங்குகள் இறக்கத்திலும், வங்கி, ஐ.டி, எண்ணெய் மற்றும் காஸ் போன்ற துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாகின்றன.

காலை 11.30 மணிக்கு இருந்த நிலவரத்துக்கு தலைகீழாக இந்திய சந்தைகள் தற்போது வர்த்தகமாகி வருகின்றன.

ஏற்றப் பங்குகள்

ஆக்ஸிஸ் பேங்க்    4.13%
ஹெச்யூஎல்    2.14%
கோட்டக் மஹிந்திரா    1.49%
டாடா ஸ்டீல்    1.44%
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்    1.13%

இறக்கப் பங்குகள்

ஐடிசி    -8.53%
பிஹெச்இஎல்    -4.17%
என்டிபிசி    -3.50%
ஐடிஎஃப்சி    -2.18%
டாடா பவர்ஸ்    -2.12%

 பட்ஜெட் எதிர்பார்ப்பில் ஏற்றத்தில் சந்தைகள்

 
வழக்கமான விடுமுறை நாளான சனிக்கிழமை  இன்று பட்ஜெட் தாக்கல் செய்ய இருப்பதால் பங்குச் சந்தைகளில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம் என்ற நோக்கில் செபி கேட்டுக்கொண்டதன் பேரில் சந்தை இன்று இருக்கும் என்று ஏற்கெனவே பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ தெரிவித்திருந்தன.
 
அதன்படி இன்று காலை துவங்கிய இந்திய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 260 புள்ளிகள் அதிகரித்து 29480 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 70 புள்ளிகள் அதிகரித்து 8915 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகின்றன.
 
இன்றைய வர்த்தகத்தில் தங்கம் 10 கிராம் 26,227 ரூபாய் என்ற அளவிலும், கச்சா எண்ணெய் ஒரு பேரல் 3,034 ரூபாய் என்ற அளவிலும். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.83 ரூபாயாகவும் உள்ளது. 
 
பட்ஜெட்டில் சாதகமான அறிவிப்புகள் இருக்கலாம் என்ற நோக்கில் இந்திய சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன. குறிப்பாக வரி மற்றும் நிதி பற்றாக்குறை குறித்த அறிவிப்புகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும். மேக் இன் இந்தியா திட்டத்துக்கான அறிவிப்புகள் விளக்கப்படும்போது அது தொடர்பான துறைகளின் பங்குகளில் அதன் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பேங்க் ஆஃப் பரோடா 3.12
பிஹச்இஎல்                 2.73
ஹச்டிஎஃப்சி                 2.29
சேச ஸ்டெர்லைட் 2.21
எல் & டி                                 1.99
 
 
விலை குறைந்த பங்குகள்
 
பிபிசிஎல்                         -0.57
ஹெச்சிஎல்                        -0.43
சிப்லா                         -0.43
பார்தி ஏர்டெல்               -0.38
ஹீரோ மோட்டார்
கார்ப்                            -0.37
.............
11.30 மணி நிலவரம்
 ஏற்றம் குறையாத இந்திய சந்தைகள்
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 236.60 புள்ளிகள் அதிகரித்து 29456.72 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 68.55 புள்ளிகள் அதிகரித்து 8913.15 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் தற்போது 0.80 சதவிகிதமாக இருக்கிறது.
10 கிராம் தங்கத்தின் விலை 93 ரூபாய் குறைந்து 26134 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 22 ரூபாய் அதிகரித்து 3056 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து 61.83 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
உலக அளவில் அமெரிக்கச்  சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. ஐரோப்பிய சந்தைகள் சற்று ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன.  ஆசிய சந்தைகளைப் பொறுத்தவரை ஷாங்காய் காம்போஸைட் மற்றும் எஸ்ஜிஎக்ஸ் நிஃப்டி மட்டும் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. மற்ற சந்தைகள் அனைத்தும் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.

ஏற்றப் பங்குகள்

பேங்க் ஆஃப் பரோடா        4.86%
டாடா ஸ்டீல்            2.77%
பிஎன்பி            2.77%
ஹெச்டிஎஃப்சி            1.97%
டிஎல்எஃப்            1.89%

இறக்கப் பங்குகள்

ஹெச்சிஎல் டெக்        -0.48%
பிபிசிஎல்                -0.71%
கோல் இந்தியா        -0.62%
டெக் மஹிந்திரா        -0.56%
ஹீரோ மோட்டோகார்ப்    -0.42%
......................
1.30 மணி நிலவரம்
திடீர் இறக்கத்தில் இந்திய சந்தைகள்.....ஏற்றத்தைவிட இறக்கம் அதிகம்
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 291.32 புள்ளிகள் குறைந்து 28928.32 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 79.30 புள்ளிகள் குறைந்து 8765.30 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் தற்போது 0.95 சதவிகிதமாக இருக்கிறது.
10 கிராம் தங்கத்தின் விலை 183 ரூபாய் அதிகரித்து 26,410  ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 23 ரூபாய் அதிகரித்து 3,057 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து 61.83 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
தற்போதைய நிலவரப்படி மூலதன பொருட்கள், எஃப்எம்சிஜி, கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் போன்ற துறை சார்ந்த பங்குகள் இறக்கத்திலும், வங்கி, ஐ.டி, எண்ணெய் மற்றும் காஸ் போன்ற துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாகின்றன.
காலை 11.30 மணிக்கு இருந்த நிலவரத்துக்கு தலைகீழாக இந்திய சந்தைகள்  தற்போது வர்த்தகமாகி வருகின்றன.

ஏற்றப் பங்குகள்

ஆக்ஸிஸ் பேங்க்        4.13%
ஹெச் யூ எல்            2.14%
கோட்டக் மஹிந்திரா        1.49%
டாடா ஸ்டீல்            1.44%
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்    1.13%

இறக்கப் பங்குகள்

ஐடிசி            -8.53%
பிஹெச்இஎல்    -4.17%
என்டிபிசி            -3.50%
ஐடிஎஃப்சி            -2.18%
டாடா பவர்ஸ்            -2.12%
.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,,
3.30 மணி நிலவரம்
ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்..... சென்செக்ஸ் 29460
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 141.38 புள்ளிகள் அதிகரித்து 29361.50 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 57.25 புள்ளிகள் அதிகரித்து 8901.85 புள்ளிகளுக்கு வர்த்தகமானது.
10 கிராம் தங்கத்தின் விலை 195 ரூபாய் அதிகரித்து 26422 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 25 ரூபாய் அதிகரித்து 3,059 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து 61.83 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
வர்த்தக நேர முடிவில் வங்கி, ஆட்டோமொபைல், ஹெல்த் கேர் போன்ற துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்திலும், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், எஃப்எம்சிஜி, ஸ்மால் கேப் போன்ற துறை சார்ந்த பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸில் 1212 பங்குகள் ஏற்றத்திலும், 1,511 பங்குகள் இறக்கத்திலும், 226 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 
ஏற்றப் பங்குகள்
ஆக்ஸிஸ் பேங்க்        8.98%
இண்டஸ் இந்த் பேங்க்        6.21%
கோட்டக் மஹிந்திரா        4.82%
சன் பார்மா            4.13%
டாடா மோட்டார்ஸ்        3.89%

இறக்கப் பங்குகள்
ஐடிசி            -8.23%
பி ஹெச் இ எல்    -3.03%
என்  எம் டி சி            -2.73%
என் டி பி சி            -1.92%
ஹிண்டால்கோ    -1.19%

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ