Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏர் இந்தியாவுக்கு ஒப்பந்த அடிப்படையில் 197 விமானிகள்

ஏர் இந்தியா 197 விமானிகளுடன் ஒப்பந்தம்
இந்திய அரசாங்கத்தின் விமான நிறுவனமான ஏர் இந்தியாவுக்குச் சொந்தமாக 60 ஏர்பஸ் 320 ரக விமானங்கள் உள்ளன. பல விமானிகள் பணிமாற்றம், இளைய விமானிகளுக்குப் பயிற்சி தருவதில் தாமதம், ராஜிமானா போன்ற பிரச்னைகளால் விமானிகள் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விமானத்தைச் செலுத்த பொதுமான விமானிகள் இல்லாததால், அதிக என்ணிக்கையில் விமான சேவைகள் தாமதவாவது, பயணங்கள் ரத்தாவது போன்ற பல பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது ஏர் இந்தியா. நேரத்துக்கு சேவை வழங்குவதில் ஏர் இந்தியா கடைசி இடத்தில் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
இந்தப் பிரச்னையைச் சமாளிக்க ஜூலை மாதம் 197 விமானிகளை ஐந்து வருட ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த இருக்கிறது ஏர் இந்தியா. தற்போது இந்த விமானங்களைச்  செலுத்த 800  விமான குழு உறுப்பினர்களும் தேவை. சமீபத்தில் ஏர் இந்தியா நிறுவன விமானிகள் மற்றும் குழு உறுபினர்களுக்கு சம்பளம் தருவதில் பிரச்னைகள் ஏற்பட்டு உன்ணாவிரதம் வரை சென்றது நினைவுகூறத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ