Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐடிசி பங்குகள் சரிவு

ஐடிசி பங்குகள் சரிவு
தற்போது இந்திய சந்தைகள் உச்சகட்ட வேகத்தில் வர்த்தகமாகி வருகிறது. பகல் 12.50 மணி வரை மட்டும் 2.32 கோடி பங்குகள் வர்த்தகமாகி இருக்கிறது. இன்று பல பங்குகள் தன் உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாகி வருகின்ற நிலையில்,
மத்திய அரசின் 2015 – 2016 பட்ஜட்டில் 65 மில்லி மீட்டர் நீளமுள்ள சிகரெட்டுகளுக்கு 25 சதவிகிதமும், அதற்குமேல் உள்ள சிகரெட்டுகளுக்கு 15 சதவிகிதமும் கலால் வரி உயர்த்தப்பட்டதால் இந்தப் பங்கு விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
ஐடிசி இன்றைய வர்த்தகத்தில் தன் புதிய உச்சமான ரூபாய் 410-க்கு வர்த்தகமாகிக் கொண்டிருந்தது. தற்போது இந்த அறிவிப்பால் ஒன்பது சதவிகிதம் வீழ்ந்து ரூபாய் 358-க்கு வர்த்தகமாகி வருகிறது.
http://www.business-standard.com/budget/article/budget-impact-itc-dips-9-on-hike-in-excise-duty-on-cigarettes-115022800410_1.html

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ