Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாடு மாறினாலும் நம்பர் மாறாது: ட்ராய்

 நாடு மாறினாலும் நம்பர் மாறாது: ட்ராய்

 
ஏற்கெனவே ஒருவர் ஒரு சேவை நிறுவனத்தில் மொபைல் நம்பர் வைத்திருந்தால் அவரது நம்பர் மாறாமல் மற்ற சேவை நிறுவனத்துக்கு மாறிக் கொள்ளலாம் என ட்ராய் அறிவித்து இருந்தது. இதன்படி தனது நம்பரை எந்த காரணத்துக்காகவும் மாற்றாமல் இருக்க ஏதுவாக இருந்தது.
 
தற்போது ட்ராய் புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒருவர் வெளிநாடு சென்றாலும் அங்குள்ள தொலை தொடர்பு நிறுவனத்துக்கு தனது நம்பர் மாறாமல் மாறி கொள்ளலாம் என்ற அறிவிப்பை ட்ராய் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
 
2014ம் ஆண்டு நவம்பர் மாதம் அனுமதி கோரப்பட்ட இந்த வசதிக்கு ஆறு மாதம் கழித்து வரும் 2015ம் ஆண்டு மே மாதம் 3ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.இனி இந்திய நம்பர்களை உலகின் எந்த மூலையிலும் நம்பரை மாற்றாமல் அந்த நாட்டில் உள்ள சேவை நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ளலாம் என ட்ராய் குறிப்பிட்டுள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ