Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய்க்கு மேல் உயர்வு!

கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து இந்திய சந்தைகளில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பெட்ரோல் விலை 10 முறையும், கடந்த அக்டோபர் முதல் டீசல் விலை 6 முறையும் குறைக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி 15ம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே 82 காசுகள் மற்றும் 61 காசுகள் ஒரு லிட்டருக்கு உயர்த்தப்பட்டன. 

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாளான இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.18 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 3.09 ரூபாயும் அதிகரித்துள்ளது. இந்த விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. 
 
இதனால் 60 ரூபாய்க்கு கீழ் வர்த்தகமாகி வந்த பெட்ரோல் தற்போது மீண்டும்  60 ரூபாய்க்கு மேல் சென்றுள்ளது.
 
சென்னை விலை நிலவரம்!
 
விவரம்     பெட்ரோல் டீசல்
பழைய விலை 59.85 49.58
புதிய விலை 63.31 52.92
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ